ஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்
இன்று உதிரக்காற்றை சுவாசிக்கிறது
லயன்அறைகளில் லயித்த வாழ்க்கை
இன்று மண்ணில் சங்கமித்தது
எம் உறவுகளின் உயிர்
பச்சிளம் பாலகன் வயது முதிந்த தாத்தாக்கள்
பழங்கால வரலாற்றை
சொல்லிப்புகட்டிய பாட்டிமார்கள்
ஆராரோ ஆரிரரோ தாலட்டுப்பாடிய தாய்மார்கள்
வாழ்க்கையில் திருமணம் என்ற வசந்தத்தை
தழுவ இருந்த இளைஞர் யுவதிகள்
மெல்ல மெல்ல வழி திறந்து
ஆதவன் சிகப்பாகி வருகையில்
புதை குழியில் விதைத்தாள் நிலமகள்
மலையக தேசம் எங்கும் சோக கீதங்கள்
பட்டொளி வீசிய தேசியக் கொடிகள்
அரைக்கம்பத்தில் பறக்கிறது,
வீதியெங்கும் ஊர் எங்கும் நாடெங்கும்
மரண ஓலங்கள் சப்பதம்மிட
எல்லாம் கண்மூடி திறப்பதற்குள்
கால தேவன் அனைவரையும்
கனப் பொழுதில் கவர்ந்து கொண்டானே..
காலம் மென்னும் நீரோடையில்
காவியம் தழுவிய உறவுகளே.
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைப்போட்டி முடிவுகள் மிக மிக விரைவில் ....வெளிவரும் என்பதை மகிழ்ச்சியாக அறித்தருகிறேன்
உயிர்நீத்த மலையக மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குபடிக்க படிக்க நெஞ்சம் கனக்கிறது
பதிலளிநீக்குகண்ணீர்ப் பூக்களைச் சரமாக்கி வடித்த கவிதை கண்டு உள்ளம் பதை
பதிலளிநீக்குபதைக்கிறது சகோதரா :( உண்மை தான் மண் மூடி மறைத்த மலையக
மக்களின் ஆன்மா சாந்தி பெற நாமும் பிரார்த்திப்போம் ...
மலையக மக்கள் மாண்ட கதை மனதில் படியும் படி வடித்தது அருமை மிக வருந்துகிறேன். காட்சியை கண்முன்னே கொண்டு வந்தது அருமை வாழ்த்துக்கள் ரூபன் .....!
பதிலளிநீக்குஉதிரக் காற்று நெஞ்சை அதிர வைக்கிறது.
பதிலளிநீக்குநெஞ்சம் நெகிழும் கவி.
பதிலளிநீக்குஅவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குஉங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
பதிலளிநீக்கு(17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்து
தேயிலை றப்பர் தோட்டத்து வாழ்வு.
கணவர் பணி.)
Vetha.Langathilakam.
நெஞ்சம் கனக்கிறது காலமென்னும் நீரோடை காளனாக மாறியதோ
பதிலளிநீக்குநெஞ்சை உருக்கிய சோகம்... நினைவை உருக்கும் கவிதை...
பதிலளிநீக்குநண்பரே நெஞ்சை உலுக்கி விட்டது கவி
பதிலளிநீக்குஆண்டவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வருகிறது !
பதிலளிநீக்குமலையக விபத்தை விவரிக்கும் வரிகள் கண்களில் கண்ணீரை சிந்த வைத்தன! முகநூலில் தாங்கள் தொடர்பு கொண்ட சமயம் இணையம் சரிவர கிடைக்காமையால் உடனே தொடர்புகொள்ள முடியவில்லை! நன்றி!
பதிலளிநீக்குபடைப்பு எப்போதும் உயிரோட்டம் மிக்கதாய் இருக்கவேண்டும்...பிறர் உணர்ச்சிகளைத்தூண்ட வேண்டும்.....ரூபன் படைப்புகளில் அது இயல்பிலேயே அமைந்துள்ளது....அவருக்கு மிகச் சிறப்பான வரப்பிரசாதமாகும்!கவிதை எளிமையாக போதிக்கிறது,,,,நடை அருமை! தொடரட்டும் தங்களின் படைப்புப் பணி! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவலி நிறைந்த கவிதை சகோதரரே.
பதிலளிநீக்குமனம் கணக்கும் கவிதை..
பதிலளிநீக்குதம மூன்று
தமிழரென்பதால் அரசின் அசட்டையா
பதிலளிநீக்குவேலை வாங்கும் முதலாளிகளின் அசட்டையா
மண்சரிவு முன் எச்சரிக்கை
வீணாகிப் போனதால்
மலையகத்தில் துயர்க் காற்று வீசுகிறதா?
தேயிலைச் செடிகளிடையே
அட்டைக்கடிகளுக்குள்ளே
தொழில் பார்க்கும் - நம்
உறவுகளின் துயரைப் பகிர்ந்தீர்
மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குதாங்கள் எழுதிய கவியின் உண்மை வரிகள் நெஞ்சை கனக்கச்செய்தன.! விழிகளில் நீருடன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.!
பிராரத்தனையுடன்,
கமலா ஹரிஹரன்.
இயற்கை இப்படியா அவர்களை சோதிக்க வேண்டும்! கவிதை அருமை உணர்வை பிரதிபலிக்கின்றது.
பதிலளிநீக்குஇதயம் கனக்கும் கவிதை..!
பதிலளிநீக்குகண்மூடும் முன்னே,மண்மூடிய கொடுமை சோகமானது.
கண்ணீரைக் காலங்கள் ஆற்றும்.!
visit my blog.
http://mahaasundar.blogspot.in/
வலி சுமந்த வரிகள் ரூபன்.
பதிலளிநீக்குஇதயத்தில் வலி......
பதிலளிநீக்குமனதை பிசையும் கவிதை வரிகள். பாராட்டுக்கள் தோழர்....
பதிலளிநீக்குமனதை நெருடும் கவிதை. எதிர்பாரா விபத்து இப்படி ஆக்கிவிட்டதே...
பதிலளிநீக்குஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்
பதிலளிநீக்குஇன்று உதிரக்காற்றை சுவாசிக்கிறது//
மனதை சோகம் அப்புகின்றது தம்பி!
வீதியெங்கும் ஊர் எங்கும் நாடெங்கும்
மரண ஓலங்கள் சப்பதம்மிட
எல்லாம் கண்மூடி திறப்பதற்குள்
கால தேவன் அனைவரையும்
கனப் பொழுதில் கவர்ந்து கொண்டானே//
ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்!