திங்கள், 7 ஜூலை, 2014

எப்போதுதான் பார்ப்பது.......




சித்திரையில்-பார்ப்போம்
சிங்காரியே சொல்லு
நித்திரையும் போனதடி
நின்று பதில் சொல்லும்
சித்திரை மாத சுடும்வெயில்
சுர் என்று என்னைத் தாக்குமே
பத்து மாத தங்க மேனி
கறுத்துப்போகுமடி

வாயாடி முத்தழகி
வாழத்தண்டு காலழகி
வைகாசி மாத்திலே
வருவாயாசொல்லுமடி
வைகாசியில் வானம் கறுக்கும்
வழியெல்லாம் ஈரம் சொட்டும்
வழுக்கிவிட்ட என்னவாகும்?
நானிருக்கேன் உனக்கு
சொல்லும்மடி புள்ள
ஆனிமாசம் வந்திடுவாய்
ஆடி ஓடி முத்தம் தந்திடுவேன்
என் அன்பிற்கு ஆனிமாத முத்தம் போதுமடி
அப்புறம் எதற்கு சந்திப்பு
சொல்லுமடி சொல்லுமடி…

போடி நீ வாய்க்காரி
பொல்லாத கைக்காரி
ஆடிமாசம் எப்படி
நாள் பாத்து சொல்லுமடி
ஆடிமாதம் ஆகாதன்னு
அப்பனும் ஆத்தாலும் சொன்னாங்க
பாடிப்பாடி சொன்னாலும்

உன் மண்டையில ஏறாதடி
சாமியாரை பார்ப்போம்-நல்ல சகுனம்
ஒன்று கேட்போம்
என்னை சேதாரம் பண்ணிப்போட்டு
செய்கூலியும் கேட்பார்கள்
அஞ்சி மாதம் பொறுத்திரு
ஐப்பேசி வந்து விடும்-அப்போ
மிஞ்சி அணிய விரல்தாரும்-இந்தப்
பஞ்சோடு நீ தீயாக

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

20 கருத்துகள்:

  1. அருமை. தமிழ்மணம் வாக்கிற்கு க்ளிக் செய்தால் தளம் மாறி விடுகிறதே... தனியாக திறக்க வேண்டாமோ.. தனியாகவும் திறக்கிறது. இங்கும் மாறி விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.

      மிக விரைவில் சரி செய்கிறேன் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அருமை தம்பி...

    ஸ்ரீராம் சார் சொன்னதும் சரி... விளக்கத்தை அனுப்புகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா

      ஆமாம் தமிழ்மணத்தில் வாக்களிக்க சொடுக்கினால் வலைப்பூ இல்லாமல் போகுது. என்னபிரச்சினை என்று சொல்லுங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. நல்ல கவிதை. ஸ்ரீராம் அவர்கள் சொன்ன அதே பிரச்சினை.... விரைவில் சரி செய்து விடுவீர்கள்... தி.த. இருக்க கவலையேன்! :)

    பதிலளிநீக்கு
  4. அடேங்கப்பா அப்பிடி அசத்தியிருக்கிறீர்கள் ரூபன் வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்துள்ளன.
    என்னை சேதாரம் பண்ணிப்போட்டு
    செய்கூலியும் கேட்பார்கள்
    அஞ்சி மாதம் பொறுத்திரு
    ஐப்பேசி வந்து விடும்-அப்போ
    மிஞ்சி அணிய விரல்தாரேன்-இந்தப்
    பஞ்சோடு நீ தீயாக
    என்னே ...... கற்பனை வாழ்த்துக்கள் ரூபன்....!

    பதிலளிநீக்கு
  5. ஐப்பசிக்கான காத்திருப்பு என்பதானது நாங்கள்கூட காத்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்திவிட்டது. அதீத கற்பனை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இத்தரையில்
    சித்திரை தொட்டு
    ஐப்பசி வரை காத்திருப்பா...?
    எப்பன் எண்ணிப் பார்த்தேன்
    கற்பனை துள்ளிக் குதிக்கும்
    கற்றுக்கொள் காத்திருப்பை என்கிறது
    உங்கள் கவிதை!

    பதிலளிநீக்கு
  7. #பஞ்சோடு நீ தீயாக#
    ஐப்பசியில் அப்பசியும் தீர்ந்து விடும் உறுதியாய் நம்புங்கள் நண்பரே !
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. அழகான வரிகள். அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. //வைகாசியில் வானம் கறுக்கும்
    வழியெல்லாம் ஈரம் சொட்டும்
    வழுக்கிவிட்ட என்னவாகும்?//...

    அழகான கற்பனை..
    வார்த்தைகள் வந்து விழுகின்றன...
    மிஞ்சி அணிய மிஞ்சி இருப்பது ஐந்து மாதமே... நன்றி.

    20 நாட்களாக இன்டர் நெட் கணைக்‌ஷன் விட்டு விட்டு வருகிறது.ஆகையால் முழுமையாக படிக்கும் முன்பே தொல்லைகொடுத்து விடுகிறது. எனவே உடனே பதிவர்களைத் தொடர முடியவில்லை. சில நேரங்களில் ஆச்சரியமாக வந்து விடும்.நன்றி

    பதிலளிநீக்கு
  10. கிராமத்து கவி தை
    தைமாத கவி தை
    நல்லதொரு க விதை
    வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  11. அருமையான நாட்டுப்புற கவிதை! நாட்டுநடப்பையும் சிறப்பாக சொல்கிறது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. ஆஹா ஒவ்வொரு மாதமாக அழைத்துப் பார்த்தீர்கள்! காதலியை...ம்ம்ம் ஐப்பசி விரைவில் வந்துவிடும் ! எல்லொருக்கும் இனிய செய்தி கேட்டிட.....அருமை....வாழ்த்துக்கள்! தம்பி!

    பதிலளிநீக்கு
  13. அழகான கவிதை.
    வாழ்த்தக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  14. என்னை சேதாரம் பண்ணிப்போட்டு
    செய்கூலியும் கேட்பார்கள்
    அஞ்சி மாதம் பொறுத்திரு
    ஐப்பேசி வந்து விடும்-
    //

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  15. ஆஹா அருமையான சொல்லாடல் .நன்று தோழர்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. மிக மிக அற்புதம்
    சரளமாக வார்த்தைகள்
    உணர்வோடு கலந்து விழுந்த விதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. போடி நீ வாய்க்காரி
    பொல்லாத கைக்காரி

    எனத் திருத்துக!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்