சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை
சின்னநெஞ்சில் வடம் பிடித்தது
துள்ளித்திரியும் வயதினிலே
தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள்
துரத்தி துரத்தி அப்பா அடித்த காலங்கள்
கல்லூரிக் காலங்கள் வசந்தகாலங்கள் ஆனது
வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தந்தது.
வாழ்வில் ஒரு சுகந்தம் பிறந்தது.
வாழ்க்கையில் அவலங்கள் மூண்டது
வாழ்வே வெறுத்துப்போனது
தன்நம்பிக்கை தகர்ந்தது.
தாயகம் கடந்தோம் தார்மிக உணர்வோடு
கல்லுரியில் படித்தோம்
கனிவான பண்புடன் ஆசிரியரை மதித்தேன்
தலை குனிந்து நடந்தோன்
தலை நிமிர்ந்து நின்றோன்
படித்த படிப்புக்கு வேலை கிடைத்தது.
பள்ளிக்கூட வாழ்க்கையாய் இருந்தது.
வாழும் உறைவிடம் வேறி இடம்
வேலை கிடைத்தது வேறி இடம்
அறிவில் சிந்த ஆசிரியர்களுடன்
ஒன்றாய் கூடி மகிழ்ந்த காலங்கள்
என் நெஞ்சில் தினம் தினம்
ஞான ஒளி ஏற்றுகிறது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அது ஒரு நிலாக்காலம் நண்பரே, பழசை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குநண்பா மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே...
வணக்கம்
பதிலளிநீக்குநண்பரே.
தங்களின் முதல் வருகையும் கருத்தும் மிக்க மிகிழ்சியாக உள்ளது. உண்மையில் நிலாக்காலந்தான்.... தங்களின் மின்னஞ்சல் கிடைத்தது. நிச்சயம் பதில் அனுப்புகிறேன். நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தலை குனிந்து நடந்தோன்
பதிலளிநீக்குதலை நிமிர்ந்து நின்றோன்
நன்றாகச் சொன்னீர்கள் மிகவும் ரசித்த வரிகள் இவை.
வணக்கம்
நீக்குசகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன் ,தொடரட்டும் நினைவலைகள் !
பதிலளிநீக்குத ம +1
வணக்கம்
நீக்குதலைவா.
வருகைக்கும் இரசிப்புக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
துள்ளித் திரிந்ததொரு காலம்! பள்ளிப்பயின்றதொரு காலம். காலங்கள் போனது கடமைகள் வந்தது!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
உண்மைதான் ஐயா அந்த காலங்கள் என் நெஞ்சில் எப்போதும் ஆர்ப்பரிக்கும் அலை போல எப்போது ஒலித்துக்கொண்டே இருக்குது ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பழைய நினைவுகளை கிளறி விட்டது..
பதிலளிநீக்கு"தலை குனிந்து நடந்தோன்
பதிலளிநீக்குதலை நிமிர்ந்து நின்றோன்" என்பது
"பணிந்தவன் உயர்வான்" என்ற
கோட்பாட்டைத் தழுவி எழுதியுள்ளீர்கள்!
சிறந்த படைப்பு
தொடருங்கள்
பின் நோக்கி சென்று மகிழ்ந்து
பதிலளிநீக்குமுன் வந்து கருத்திட்டேன்.
நன்று.
நன்றி சகோதரரே.
இளமைக்காலம்
பதிலளிநீக்குநெஞ்சில் ஊஞ்சல் ஆட
வார்த்தைகளும் வந்து
வசமாய் மாட்டிக்கொள்ள
அளவில்லா இன்பம்
நினைவில் தங்கியதோ நீங்காமல்!
அருமை அருமை ! வாழ்த்துக்கள் !
நினைவுகள் ஒரு சங்கீதம் தான் தொடரட்டும் சகோ தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குநெஞ்சில் தினம் தினம்
பதிலளிநீக்குஞான ஒளி ஏற்றுகிறது
பழைய நினைவு.
Vetha.Elangathilakam,
நினைவுகள் இனிமை தம்பி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
கல்லூரிக் காலங்கள் நினைவுக்கு வந்தது! தம்பி சகோதரி இனியாவுடன் ஊர் சுற்றினாலும் கவிதை போட்டுட்டீங்களே! .......பயணம் நல்லாருந்துச்சா?!!!!
பதிலளிநீக்கு//வாழும் உறைவிடம் வேறி இடம்
பதிலளிநீக்குவேலை கிடைத்தது வேறி இடம்//
எல்லோருக்கும் இப்படிதான் போலும் ! தங்களது ஆதங்கம் எங்கள் ஒவ்வொருவருக்கும் அதே போல் நினைக்க தூண்டியதே இந்த கவிதையின் வெற்றி என்று சொல்லலாம் ! தொடர்க......
பசுமை நிறைந்த நினைவுகளுக்கு இட்டு செல்லும் கவிதை !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமை சகோதரரே!
பதிலளிநீக்குஉணர்வுகள் அற்றுப் போகும்வரை
நினைவுகளும் எமை நீங்காது.
சுகமோ துக்கமோ தொடரும் எப்பொழுதுமே..
வாழ்த்துக்கள்!
மலரும் நினைவுகள்! என்றும் சுவையானவை!
பதிலளிநீக்கு