செவ்வாய், 15 ஜூலை, 2014

பேனாமுனைப்போராளி



பேனாவின் நரம்பு-வழிஓடும்
உதிரத்தில்உலக சரித்திரத்தை
புரட்டிப் போட்டவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கெல்லாம் ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.
அங்கே எல்லாம்

முதற்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்
பேனா சிறிய விலை என்றாலும்
அதன் நுனியில் இருந்து -வடியும்
கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி
உலக சரித்திரத்தயே-சொல்லிவிடும

ஆயுத முனையில் யுத்தம்-செய்யும்
எதிரியை விட
பேனா முனையில் எழுதி
யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்
உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்
ஆயுதத்தால் யுத்தம் செய்வதை- விட
பேனா முனையில் யுத்தம் செய்பவன்
மிக வலிமை படைத்தவன்

பேனா முனையில் யுத்தம்-செய்பவன்
நீதி நியாயம்.தர்மம் எல்லாம்
பக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்
எரிகின்ற தீப்பிளம்புக்கு-மத்தியில்
தன் உயிரே துச்சமென -பாராமல்
அர்ப்பணம் செய்பவன்
நாட்டு மக்களுக்கு-சுதந்திர
தாகத்தை இதமாக -சுவாசிக்க
பெற்றுக் கொடுப்பவனும்
பேனா முனைப் போராளிதான்

எங்எங்கோ மனித குலத்துக்கு
எதிராக அடக்கு முறைகளும்
இன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ
ஒரு இனத்தை ஒருஇனம்
எங்கே ஒடுக்குகின்றார்களோ
அங்கல்லாம் பேனா முனைப்
போராளியின்-குரல்
சர்வதேச அரங்கெல்லாம்
கம்பீரமாக ஓங்கி ஒலிக்கும

சிலநேரம் அணுகுண்டு-வெடித்து
சில எல்லைகளைத்தான்-அழிக்கும்
ஆனால் பேனா முனைப் போராளி
எடுக்கும் அணுகுண்டுப்பேனா
அது உலகெங்கும் அதிர்வுகளை
உணர வைக்கும்-அந்த
நிஜமான அணுகுண்டை-விட
பல மிக்க —சக்தி
பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்

ஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்
யுத்தம் செய்யும்-வீரர்கள்
பல இழப்புக்களை
உதிரம் சிந்தித்தான்
நாட்டு எல்லையை மீட்க வேண்டும்
ஆனால் பேனாமுனைப் போராளி
உதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்
பேனா முனையில் எழுத்து வடிவில்
புரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.
அவன்தான் பேனாமுனைப் போராளி
.
யுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்

பேனா முனைப் போராளியின்
பலம் பலமடங்கு என்று பொருள்படும்

எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
தன் தாய் நாட்டுக்காகவும்
தன் சமுதாயத்துக்காகவும்
அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
அவர்களை இன்று இருக்கின்ற
எம் சமுதாய உறவுகள்
தினம் தினம் பூசிப்போம்……………

-நன்றி-
-
அன்புடன்
-
-
ரூபன்-

50 கருத்துகள்:

  1. வாள் முனையை விடக் கூர்மையானது பேனா முனை என்பார்கள். யாழிலும், முன்னர் சீசர் நகரத்திலும் நூலகங்கள் எரிந்து போனபோது எவ்வளவு பெரிய நஷ்டம் என்று உலகைப் பதற வைத்தனவே.. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. தமிழ் மனம் சமர்ப்பித்து , வாக்கு ஒன்றும் போட்டாகிவிட்டது!
    பேனா முனை வாள்முனையை விட கூர்மையானது!
    எனவே தொடர்ந்து போராடுவோம் சகோ:)

    பதிலளிநீக்கு
  3. //முதற்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
    வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்//
    அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. ஆனால் பேனா முனைப் போராளி
    எடுக்கும் அணுகுண்டுப்பேனா
    அது உலகெங்கும் அதிர்வுகளை
    உணர வைக்கும்-அந்த
    நிஜமான அணுகுண்டை-விட
    பல மிக்க —சக்தி
    பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்

    ரூபன் என்ன சொல்ல வாயடைத்து போய்விட்டேன். எடுத்த விடயமும், உரைத்த விதமும், எழுதிய வடிவமும் சூப்பர் ரூபன் தொடருங்கள் தொடருங்கள் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  5. கருத்துள்ள உண்மையான வரிகள் தம்பி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. ஆஹா சூப்பர்....பேனா முனைப் போராளி....உலகையே புரட்டி போடும்....மூலதனமாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. நீங்களும் ஒரு பேனா முனைப் போராளிதானே ரூபன் ?அதனால்தான் பேனா முனை ரூபனின் ரூபத்தையே வரைந்து உள்ளது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. பேனா எடுப்பவனும் ஒரு போராளிதான், இது நிதர்சனமான உண்மை நண்பா,,,,
    கனல் தெறிக்க கண்டேன் உமது சொற்''கல்''லில்.....

    பதிலளிநீக்கு
  9. பேனாமுனைப் போராளி.....உங்கள் எழுத்தே அதற்கு அத்தாட்சி..!

    பதிலளிநீக்கு
  10. கருத்துள்ள கவியாக்கம். வாழ்த்துக்கள்.... பேனா முனைப்போராளிகள் யாவருக்கும்,உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. ஈழத்து உண்மைகளை
    உலகுக்கு அறிமுகம் செய்த
    பேனா முனைப் போராளிகளை
    என்றும் மறவோம்...
    ஊடகங்கள்
    குரைக்கிற நாய்கள் - அவை
    பேனா முனைப் போராளிகளை
    நினைவூட்ட - நம்
    மக்கள் மீள நினைவூட்டுவர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்
      த.ம வாக்கிற்கு நன்றி

      வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. எழுத்தாளனும் சாதிக்கலாம் எதையும் என்று
    மிக மிக அழகாகக் கூறினீர்கள்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. உங்கள் உள்ளத்தே முறுக்கிக் கிடக்கும் உணர்வுகளையும் உள்ளக் கொதிப்பையும் வெளியே காட்டுகிறது இந்த கவிதை! காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும் என்றே நம்பிக்கை!
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. பேனாவும்/எழுத்தும் கூரிய வாளுக்குச் சமம்! சீரிய எழுத்து வெல்லும் ஒரு நாள்!

    மிக அருமை தம்பி ரூபன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. பல நேரங்களில் பேனா முனையில் எழுதும் எழுத்துக்கள் போகவேண்டிய இலக்கை எட்டுவதில்லை. ஆனால் எழுதுபவன் தன்னை போராளியாகக் காட்டிக் கொள்வதை நிறுத்தக்கூடாது. எனக்குத் தோன்றுகிறது பேனாமுனைப் போராளிகளுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். கருத்துக்கள் போகுமிடம் சேர்ந்துவிட்டால் வெற்றியே. ஒரு தன்னம்பிக்கைப் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. பேனா முனையில் தீட்டிய வரிகளை போராளிக்கு உரியதாக்கிய விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. பேனா வாளை விடக்கூர்மையானது. அருமையான கவிதை சகோதரரே, நீங்களும் ஒரு பேனா முனைப் போராளிதான்

    வாழ்த்துக்கள்
    த.ம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி
      வருகைக்கும் கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  21. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  22. கருத்துள்ள பதிவு.....

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. செறிவுள்ள கவிதை இனிய தமிழில்
    பேனா முனை உங்கள் கையில் பேராயுதமாகி விட்டது கவிஞரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்னேன்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  24. பேனாமுனைப் போராளி..
    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  25. பேனா முனைப் போராளி...

    தலைப்பும் தலைப்புக்கேற்ற கவிதையும் அருமை...

    பதிலளிநீக்கு
  26. வலைச்சரத்தில் அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு இனிமையான செய்தி. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  27. வணக்கம்
    த.ம வாக்கிற்கு மிக்க நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  28. வணக்கம்
    சகோதரி

    வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தகவலை தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள் பல
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. பேனாவின் கூர்மை
    பேச்சைவிட வலிமை

    நல்ல கவிதை
    நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  31. " போர்வாளின் நுனியை விடவும் வலிமையானது எழுதுகோலின் முனை " என்ற முகம்மது நபிகளின் வார்த்தைகளை அருமையான கவிதையாக படித்துள்ளீர்கள் !

    நண்பரே உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஒரு கேள்வி... இத்தனை வலைப்பூக்களையும் எப்படி ஒன்று விடாமல் உங்களால் தொடர முடிகிறது ?

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )


    பதிலளிநீக்கு
  32. //எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
    தன் தாய் நாட்டுக்காகவும்
    தன் சமுதாயத்துக்காகவும்
    அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
    அவர்களை இன்று இருக்கின்ற
    எம் சமுதாய உறவுகள்
    தினம் தினம் பூசிப்போம்……………

    //


    கண்டிப்பாக

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்