Add caption |
போட்டிக்கான தலைப்பு :
1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.
2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.
3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.
4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா...?
5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
போட்டியின் விதிமுறைகள் :
1. இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.
2. ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம். பதிவர்கள் அல்லாதவர்கள் அனுப்பலாம். ஆனால் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே ஏற்கப்படும்.
3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font) எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.
5. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : svramani08@gmail.com, rupanvani@yahoo.com, dindiguldhanabalan@yahoo.com, pandi29k@gmail.com
நடுவர்கள் :
பரிசுகள் :
முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம் + சான்றிதழ்
ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்
புத்தக பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. அவர்கள் விரும்பும் நூல்களை திரு. முத்து நிலவன் ஐயா அனுப்புவார்கள். அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்ற முறை தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பிய சான்றிதழ் உங்கள் பார்வைக்காக :
பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்...! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்... கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படங்கள் உட்பட அனைத்தும் சிறப்பாக உள்ளது... அசத்திடுவோம் தம்பி...
பதிலளிநீக்குபாராட்டுக்கள்... நன்றி...
வணக்கம்
நீக்குஅண்ணா
நம்ம யாரு... ஒன்றுடன் ஒன்றும் அந்த ஒன்றுடன் ஒன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்... கருத்துக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குபடைப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக
அடுத்தடுத்து போட்டிகளை அறிமுகப்படுத்தி அதனை திறம்பட
நடத்தும் உங்கள் அன்பார்ந்த மனதுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
==
தகுந்த நடுவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும்
தேர்ந்தெடுத்திருக்கும் இந்த திருவிழா சிறப்புற நடந்தேற
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வணக்கம்
நீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு கண்டேன்! பங்குபெறும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! கவிதைப் போட்டிக்கான சான்றிதழ் கிடைத்ததும் தங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.கட்டாயம் இதிலும் பங்கு பெற்று பதக்கங்களை வெல்லுங்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக அருமையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது கட்டுரைப் போட்டி.
பதிலளிநீக்குசிறந்த நடுவர்கள்! நட்பியலில் இலக்கணமாகத் திகழும் அருமையான நிர்வாகக் குழுவினர்!
சிறப்புப் பரிசுகள் என ஒரு பெரும் திருவிழாவே ஆரம்பித்துவிட்டதான உணர்வாக உள்ளது!
யாவும் சிறப்பு! பங்குகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும்
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
வணக்கம்
நீக்குசகோதரி
தங்களின் வருகையும் கருத்தும் என்னும் பல போட்டிகளை நடத்த வழிசெய்யும் என்பதில் ஐயமில்லை...கட்டாயம் நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவேண்டும என்பது எனது தாழ்மையான கருத்து...சகோதரி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதிய தளம் ஒன்றினைத் துவங்கி, ” ப்ளாக்கர்” (BLOGGER ) பக்கம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்! இனி உங்கள் பக்கம் கருத்துரைகள் தருவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா
தங்களைப்போல பலரது கருத்துக்கு ஏற்ப இந்த தளம் திறக்கப்பட்டள்ளது.. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதிய தளம் வளம் பெற வாழ்த்துக்கள் சகோதரா .
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குசகோதரி
தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி நிகழ்த்தி தீபாவளி திருவிழாவாக சிறப்பாய் அமைந்தது! தமிழர் திருநாளான தைப் பொங்கல் கட்டுரைப் போட்டி அறிவித்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் அழகான அர்த்தமுள்ள தலைப்புகளில் கட்டுரைப்போட்டி தொடங்கியிருப்பதில் மனமகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துக்கள் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா.
இப்படியான ஒருதளம் புதிதாக இருக்கிறதா? என்று வந்து பார்த்து கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
கவிதைப்போட்டிக்கான சான்றிழ் அனுப்பட்டுள்ளது... மிக விரைவில் வந்தடையும்...கட்டாயம் இந்த போட்டியில் நீங்களும் பங்கு பற்றுங்கள்... இது எனது தாழ்மையான கருத்து..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிச்சயமாக தங்கள் அன்பின் கருத்தை ஏற்று போட்டியில் கலந்துகொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குபுதிய தளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குமுன்னர் வந்து இட்ட கருத்து விழவில்லை போலும். அனுமதி ஏனோ தரவில்லை
போட்டி திருவழா போல் தான் களை கட்டுகிறது. மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.
இந்தப் பெருங் கடலில் நான் ஒரு துளியாய் அது தான் யோசனை பார்க்கலாம்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் எண்ணம் வாழ்க. எண்ணம் கொண்டவரும் பெருமை பெறுக.
வணக்கம்
நீக்குஅம்மா
தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மிவும் உவகை கொண்டேன்..உங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... நன்றிஅம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் உயர்ந்த பணிக்கு
எனது வாழ்த்துகள்!
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரர் ரூபன் தீபாவளி கவிதைப்போட்டியில் ஆருதல் பரிசான தாங்கள் அளித்த வெற்றிசான்றிதழ் கிடைக்கப் பெற்றேன் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் தங்களுக்கு இனிய வாழ்த்துக்களும் நன்றியும் மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடர்வோம்
பதிலளிநீக்கு