வியாழன், 19 டிசம்பர், 2013

இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்

இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்


கமல் பிறந்து வளர்ந்து 8 வயது இருக்கும் போது அவனுடைய தாயும் தந்தையும் ஒரு விபத்தில் சிக்கி மரணம்அடைந்தார்கள்.பின்பு அவன் தன்னுடைய பாட்டியின் அரவனைப்பில் வாழ்ந்து வந்தான் பள்ளியில் துள்ளித்திரிந்த காலங்கள். மற்ற பிள்ளைகளை அவர்களுடைய தாய் தந்தையர் கை பிடித்து கூட்டிக்கொண்டு வரும் போது கமல் தன் தாயையும் தந்தையும் நினைக்கிறான் அப்போது .இந்த காணம் ஒலிக்கிறது. (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


இப்படியாக நினைவுகள் அவன் நெஞ்சை கசக்கி பிழிந்தது.என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல் என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு சொல்கிறான் அங்கு பாட்டியின் உடல் நலம் விசாரித்த பின் எனக்கு வாழ்வான வாழ்வு தந்த தாயும் தந்தையும் முற்றத்தில் வைத்து நிலாச்சோறு ஊட்டி தேனான வார்தைகளும் பேசி சிரித்து விளையாடிய காலங்கள் அவர்கள் என்னை தோழில் சுமந்து தாலாட்டுப்பாடி நடந்த போது அவர்களின் கால்த் தடங்கள் பதிந்த முற்றங்கள் எல்லாம் நினைத்து பார்கையில் என் விழியோரங்களை நனைத்தது கண்ணீர்த்துளிகள்.அந்த வேளையில் இந்த காணம் ஒலிக்கிறது. (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)

இந்த சோகங்கள் எல்லாம் ஒருபக்கம் இறக்கிவைத்து விட்டு அவனுக்கு உயர்தரப்பரீட்சை எழுதும் காலம் நெருங்கியது அதற்காக அவன் விடாப்பிடியாக இரவும் பகலும் கண்விழித்து படித்திருந்தான். விடியக் காலையில்8.மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு சென்றான்அவனுக்கு முறைப்பெண்ணான காவேரியும் பரீட்சை எழுத வந்தாள். கமலை கண்டவுடன் காலை வணக்கம்என்று புன்னகை பூத்த வண்ணம் சொன்னாள் அதற்கு கமலும் பதில்வணக்கம் சொன்னான் ஒரு நாளும் பேசாத காவேரி ஏன் இப்போ பேசவேண்டும் என்று தன் மனதுக்குள் நினைத்தான்பாலைவனமாக இருந்தஇதயம் கூட அவள் பேச்சில் துளிர் விட்டு துளீர்த்தது.அவள் பேச்சிலேஅவளின் மூச்சிக்காற்றை சுவாசிக்க என் இதயம் துடியாக துடித்தது. அப்போது இந்த காணம் ஒலிக்கிறது.
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


நமக்கு எந்த சொந்தங்களும் இல்லை நமக்கென்று நானே வாழ்வு அமைத்தால் என்ன என்ற உணர்வுடன் வெண்நிலவு போல உள்ள காவேரியின் மனதில் உள்ளதை அறிய காதலுக்கு தூதுவாக காகிதத்தில் கடிதம் எழுதி அவள் மனதை அறிய நினைத்தேன். அவள் இடம் இருந்து சாதகமாக பதில் வந்தது. அப்போது. அவனின் மனதில் ஒரு மகிழ்ச்சிப் புயல் வீசியது. அந்த வேலையில் இந்த காணம் ஒலிக்கிறது.  (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)


இப்படியாக கமலின் காதல் நாள் அடைவில் வளர்ந்தது. காவேரியின் வீட்டுக்கு தெரிய வந்து. அவர்களின் சம்மதத்தின் பெயரில் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது .அந்த வேளையில் கமல் உணருகிறான் ஆரம்பத்தில் அம்மா.அப்பா இல்லை என்ற வேதனையால் என் விழியோரங்களை கண்ணீர்த்துளிகள் நனைத்தது. ஆனால் இன்று என் விழியோரங்களை ஆனந்தகண்ணீர்த்துளிகள் நனைக்கிறது இப்படியான காவேரி மனைவியாக கிடைத்ததை நினைக்கும் போது இந்த காணம் ஒலிக்கிறது.
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)



முடிவுரை-கமல் வாழ்வில் தாய் தந்தையை இழந்து இளம் வயதில் அவனது விழியோரங்களை அவனது கண்ணீர் துளிகள் நனைத்தது.மிகவும் கஷ்டப்பட்டு படித்து அவன் இறுதில் காதலித்த பெண்னை திருமனம் செய்து வாழ்கிறான் துன்பக்கண்ணீர்த்துளிகள் அவனது விழியோரங்களை முன்பு நனைத்தது இப்போ விழியோரங்களை காதல் என்னும் ஆனந்த கண்ணீர் நனைக்கிறது.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

28 கருத்துகள்:

  1. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(இசையும் கதையும்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ரூபன்..!
    புதிய முயற்சி... அமர்க்களம் அதற்கேற்ப பாட்டுக்கள் தெரிவு செய்து அசத்துகிறீர்கள். இதை மனதார வரவேற்கிறேன். புதிய முயற்சிகள் புகுத்துவது சுவாரசியமே. இருக்கும் வளங்களை தனக்கேற்ப அமைத்து பயன்படுத்துவது சிறந்த கலையே.
    மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும்.. என்னை பல படைப்புக்கள் படைக்க வழிவகை செய்யும்...நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. வித்தியாசமாக யோசித்து அருமையான பாடல்களை
    மிகச் சிறப்பாகக் கோர்த்துக் கதை சொன்னவிதம்
    மிக மிக அருமை
    கதை பாடல்களோடு படிக்கையில்
    மனம் மிகக் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.
      தங்களைப்போன்றோரின் கருத்துக்கள் என்னை நல்வழிப்படுத்தும் என்பது உறுதி..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி..ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. அருமை! அருமை! நல்ல முயற்சி ரூபன்!

    நல்ல பாடல்கள் தெரிவு. மிகவும் பிடித்தது எனக்கும்.

    பாடல்களை குறித்து அப்போது இந்த கானம் ஒலித்தது எனக் குறிப்பிட்டுச் சொல்லாமல், கதையோட்டத்துடன் இயல்பாய் பாடல் வருவதுபோல விட்டால் கதை இடையில் தடைப்படாது என்பது என் கருத்து. ரசிப்பினை மேலும் அதிகரிக்கும்.

    கதையும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் ரூபன்!

    த ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி

      தங்களின் வருகையும் வாழ்த்தும் விமர்சன கருத்தும் என்னை அடுத்த பதிவில் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பது... உறுதி...நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. வணக்கம்
      சகோதரி

      தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. தங்களின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம்
      தனபால்(அண்ணா)

      தங்களின் கருத்து எனக்கு ஒரு விற்றமீன் மாத்திரை போல..... நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி

      தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. நண்பரே! ஆஹா! எங்கேயோ போயிட்டீங்க!! அருமையான கதைக்கேற்ற பாடல்களுடன் ஒரு நல்ல பதிவு!! புதுமையான ஒரு விஷயம்!! பாராட்டப்படவேண்டிய ஒன்று! சினிமா பார்த்தது போன்ற ஒரு உணர்வு!! நல ரசனை நண்பரே!! தொடர்ந்து அசத்துங்கள்!! வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரன்...

      உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான் நான் எத்தனை வலைப்பூ பக்கம் சென்று வந்திருக்கேன்.இப்படியான தலைப்பில் எழுதியது இல்லை.. புதுமைதான்... தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும்... மிக மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி.சகோதரன்..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. அந்த காலத்தில் இலங்கை வானொலியில் இப்படி ஒலிபரப்பானது நினைவுக்கு வந்தது ,வலைப் பூவில் நீங்கள் செய்வது புதுமை !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தலைவா...

      நீங்கள் சொல்வது சரிதான் இலங்கை வானொலியில். அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இந்த இசையும் கதையும் உள்ளது..ஜீ..... முதல் தடவையாக எழுதியுலேன்...அடுத்து நன்றாக வரும் .....தங்கள் வருகைக்கும் கருத்துக்ககும் மிக்க நன்றி...தலைவா...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் வருகையும் வாக்களிப்பும்... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. PLAY BUTTON எனக்கு சரியாக வரவில்லை. எனவே தமிழ்மணத்தில் ஓட்டு மட்டும் போட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையாக இருந்தது கதையும் கானமும். இலங்கை வானொலியில் கதையும் கானமும் கேட்டது போல் உள்ளது. முன்பு தொலை காட்சி இல்லாத போது கருத்தும் கானமும் கேட்டு மகிழ்வோம் இலங்கை வானொலியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா
      தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. போட்டிக்கான குறிப்புகளை பார்க்க வந்தபொழுது இந்த தளம் பார்த்தேன் சிறப்பாக இருக்கிறது நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்