நெஞ்சை தழுவும் நினைவுகள்-(சிறுகதை)
வறுமையும் விடவில்லை
செய்த தொழிலும் கைகூடவில்லை யுத்தம் என்ற கொடிய விசம் பரவியது தாங்க முடியாமல் அயல்தேசம்
போனவர்கள் எத்தனைபேர். வெளி நாட்டு வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிப்பார்கள் என்று எத்தனை
உள்ளங்கள் ஏங்கி அலைமோதும் ஆனால் இங்கு ஒவ்வொரு நிமிடமும் படும் துன்பங்களும் துயரங்களும்
அவஸ்த்தைகளும் தாங்க முடியாமல் தன்னுயிரை தானாக மாய்த்த உறவுகள் எத்தனை பேர் …காய்ச்சல்
தலைவலி என்று துடியாய்த்துடித்தாலும் எம்முடைய உடல் நலம் எம்முடை துக்கம் விசாரிக்க
கூட சொந்தங்கள் இருந்தும் இல்லாத அனாதைகள் போல தவியாய்த் தவிக்கிறோம். அம்மா அப்பா
அண்ணா தம்பி என்று அழுகிற கதறல் குரல் மட்டும் நான்க சுவர்களுக்கு மட்டுமே கேட்கும்
.இந்த கொடிய துன்பத்தை சுமந்து வாழ்கிறார்கள்
திருமணம் ஆனவர்கள் மனைவியை பிரிந்த சோகமும் பெற்ற தெய்வங்களை பிரிந்த சோகமும் பெற்ற பிள்ளயை விட்டு பிரிந்து சென்ற சோகமும் பிள்ளையோடு இருந்து பாசம் பரிமாறும் வயதினிலே அயலான் தேசத்தில் டலருக்காகவும் யூரோக்காவும் ரிங்கிட்டுக்கும் ரியாலுக்கும் அன்னியவன் நாட்டில் அடிமாடுகள் போல உழைக்கிறார்கள் தங்கள் உறவுகளுக்காக பணம் அனுப்புகிறோம் கொஞ்சம் சந்தோசம் கலந்த முகபாவனை முகத்தில் துள்ளும் அந்த நேரத்தில் மட்டும்…..ஆனால் மனதில் ஒரு விததுன்பம் எம்மை அறியாமல் ஓடிக்கொண்டதான் இருக்கும் இந்த வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள்…
பக்கத்து விட்டுத் திருமணங்கள் விசேட நாட்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்கள்
எல்லாம் எம்தாயக சொந்தங்களுடன் கூடி சந்தோசம்
அடைந்த நாட்கள்.முதல் காதல் வந்த போது முதலில் காதலியை சந்தித்த இடம் அவளோடு இருந்து
பேசிய பனைமரத்தின் நிழலும் நாகமரத்தின் நிழலும்அந்த
திருவிழாக்காலங்களில் காதலியுடன் கடைத்தெருக்களை சுற்றித்திரிந்த காலங்கள் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காதலியை துவிச்சக்கர
வணடியில்(சைக்கில்) ஏற்றித் திரிந்த காலங்கள் ஞாபஅலைகள் மனக் கதவுகளை ஒருனம் திறக்கிறது…..இந்த
நாட்களை நினைக்கவில்லை மறந்து விட்டார்கள் என்று சொந்தங்களும் காதலியும் நினைக்கலாம்
ஆனால் அத்தனை நினைவுகளையும் இரவும் பகலுமாக நெஞ்சில் சுமந்த வண்ணம் அழுது கொண்டு வாழுகிறோம்…
கோயில் மணி யோசை கேட்டல் ஊரில் உள்ள நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக சென்று இறைவனை வணங்கும் நிகழ்வும்இறுதியில் பூசை முடிந்தவுடன் பிரசாதம் வேண்ட நான் முந்தி நீ முந்தி என்று வரிசையில் நின்ற நாட்கள் திருவிழா என்று வந்தால் ஊர் எங்கும் பட்டாசு சப்பதங்களும் இரவு நேரங்களில் சதங்கை ஒலி கேட்க மாட்டு வண்டியில் எம் ஊர்ச் சொந்தங்கள் இரவு நேர சாப்பாடும் எடுத்துக்கொண்டு செல்லும் அந்த மாட்டு வண்டி அணிவகுப்பை நிலாக் காலங்களில் இரசித் நினைவுகளும் எம் மனதை விட்டு அகல வில்லை இந்த மகிழ்ச்சியான காலங்களை நினைத்து நினைத்து தினம்தோறும் கண்ணீர் வடிப்பதுதான்…. வாழ்க்கையாகியது
ஒவ்வொரு ஞாயிறு
என்றால் எங்கள் உரில் பொது வேலை(சிரமதானப்பணி)
என்ற ஒன்று நடை பெறுவது வழக்கம் ஒவ்வொரு வீதீக்கு வீதீ மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து
சுத்தம் செய்வது வழக்கம் வேலை முடிந்தவுடன் இளைப்பாற தேனீர் கொடுப்பார்கள் அதை எல்லாம்
வேண்டி நண்பர்களுடன் இருந்து சுவைத்த காலங்கள் எம் மனதை விட்டு விலக வில்லை
மரணச் செய்தியோ அல்லது நல்ல நிகழ்வுகள் பார்க்க முடியாமல் வாடிய மனசுடன் அரபு நாட்டில் வாழ்பவனுக்கு அரபுக்கடலும் ஆசிய நாட்டில் வாழ்பவனுக்கு ஆசிய கடலும் ஐரோப்பாநாட்டில் வாழ்பவனுக்கு ஐரோப்பாகடலும் சொந்தம் என்று நினைத்து நம் தேசம் இருக்கும் பக்கத்தை விமானம் பறந்துவருகிற பக்கத்தையும் திரும்பிப்பார்த்து கடல் மாதவிடம் சோகத்தை கொட்டுவதே வாழ்க்கையாகி விட்டது……… எல்லாச்சோகத்திற்க்கும் கடல்தான் சொந்தமாகியது
இருப்பவர்கள் துன்பத்தை சுமந்தவன்னம் வாழ்கிறார்கள் மீண்டும்
போகிறவர்கள் துன்பத்தை தூக்கி எரிந்து விட்டு போகிறார்கள்…..ஊரில் உள்ளவர்கள் வெளி
நாடு போகவேண்டும் என்ற ஆசையும் வெளி நாட்டில்
உள்ளவர்கள் சொந்த தேசம் போக வேண்டும் என்ற ஆசையும் அவர்களின் மன வானில் கொடிகட்டி பறக்கிறது…மேல் சொல்லியுள்ள நினைவுகளும் துன்பங்களும் எத்தனை மனிதர்களின் வாழ்வில் அன்றும் இன்றும் நடைப்பயணமாக பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது..........
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொட்டும் பனியில் உறைந்து போன மனக் கீற்றில்
பதிலளிநீக்குஒட்டிக் கொண்டது உண்மையின் வரி வடிவங்கள் !!
வெளிநாட்டில் வாழும் மக்களின் மனநிலையைப்
படம் பிடித்துக் காட்டிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் சகோதரா .
வணக்கம்
நீக்குசகோதரி
உறங்கும் விழிகள் கூட உறங்க மறுக்கிறது.. உறவுகளை நினைத்து நினைத்து எத்தனை உள்ளங்களின் நெஞ்சுக்குழி காய்கிறது... எத்தனையோ. அவலங்களை சுமந்த வண்ணம் வாழ்கிறார்கள்... தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஸ்ரமதானப் பணி சிறப்பான பணி. நினைவுகளை சிறப்பாக தந்திருக்கிறீர்கள் ரூபன்.
பதிலளிநீக்குஎழுத்து அளவு மிக சிறியதாக உள்ளது.
வணக்கம்
நீக்குமுரளி(அண்ணா)
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை நெகிழ வைத்த கதை (அல்ல... உண்மை)
பதிலளிநீக்குதம்பி... எழுத்தின் அளவை மட்டும் சிறிது பெரிது படுத்தவும்... அதே போல் பதிவை தமிழ்மணத்திலும் இணைக்கவும்...
வணக்கம்
நீக்குஅண்ணா.
நீங்கள் சொல்வது போல.. வெளிநாட்டு வாழ்க்கையில் நடக்கும் நிஜவாழ்வு..சம்பவம்....வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெளிநாட்டில் வேகுகிறோம்
பதிலளிநீக்குஊரை நினைத்து உருகுகிறோம்
உண்மையை கொட்டி
கண்களையே மிதக்கவிட்டீர்.
வேதனையின் விளிம்பில் னின்று
வெம்புகிறோம் வாழ் நாளில்
விடியும் என்றே நாட்களையும்
மெல்லவே நகர்த்துகிறோம்.
ஆறுதலை யார் யாருக்கு வளங்குவ தென்றே தெரியவில்லை ரூபன் மிக நன்று. .ஊரில் உள்ளவர்கள் வெளி நாடு போகவேண்டும் என்ற ஆசையும் வெளி நாட்டில் உள்ளவர்கள் சொந்த தேசம் போக வேண்டும் என்ற ஆசையும் அவர்களின் மன வானில் கொடிகட்டி பறக்கிறது. இது தான் விதி நமக்கு.
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
வணக்கம்
நீக்குஅம்மா.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
நண்பர்களுடன் நண்பிகளுடன் பழகிய காலங்கள் நாங்கள் வாழ்ந்த வீடுகள் நாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகள்.எங்களின் தேவைக்கு தலையில் விரகு கட்டு சுமந்து நண்பிகளுடன் அன்னநடை போட்டுவந்த காலங்கள்.இடுப்பில் தண்ணீக்குடம் சுமந்து வந்த நினைவுகள். எல்லாம் மறந்து வாழ்கிறோம்..... எல்லாவற்றையும் நமது மனம் என்ற மரணக்குழிக்குள் புதைத்து விட்டு வாழ்கிறோம்..
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி..அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் இதை படிக்கும்போது என்கண்கள் கண்ணீர் அருவியானது நீங்கள் எங்களை பிரிந்திருந்தாலும் எங்கள் மனம் எப்போதும் உங்களோடு இணைந்துதான் இருக்கிறது என் மகனும் அங்குதான் இருக்கிறான் இறைவன் அருளால் நலமே பெறுக
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா.
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//ஊரில் உள்ளவர்கள் வெளி நாடு போகவேண்டும் என்ற ஆசையும் வெளி நாட்டில் உள்ளவர்கள் சொந்த தேசம் போக வேண்டும் என்ற ஆசையும் அவர்களின் மன வானில் கொடிகட்டி பறக்கிறது
பதிலளிநீக்குமேல் சொல்லியுள்ள நினைவுகளும் துன்பங்களும் எத்தனை மனிதர்களின் வாழ்வில் அன்றும் இன்றும் நடைப்பயணமாக பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது..........//
நண்பரே! இதைப் படித்தவுடன்...இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் அப்படியே மனதில் வந்து உலுக்கியது! நல்லதொரு பதிவு! ஆனால் மனம் கனக்கிறது!
இப்படி எழுதுவதால் இதை வாசிக்கும் பல மக்களின் மனதிந் துரங்களின் வடிகாலாய் கூட அமையலாம்!
த.ம.+
வணக்கம்
நீக்குநண்ரே..
இலங்கையில் உள்ள மக்கள் மட்டும்மல்ல அனைத்து உள்ளங்களின் ஏக்கம் இதுவாகத்தான் உள்ளது.வருகைக்கும் கருத்துக்கும் தமணத்தில் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னுடைய பின்னூட்டம் காணவில்லையே!
பதிலளிநீக்குநேற்று போட்டு இருந்தேன்.
வணக்கம்
நீக்குஅம்மா
நீங்கள் போட்ட பின்னூட்டம் எனது மற்ற வலைத்தளத்தில் wordpress இல் உள்ளது இந்த வலைப்பூவுக்கு இன்றுதான் கருத்து வந்திருக்கிறது. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு ஞாயிறு என்றால் எங்கள் உரில் பொது வேலை(சிரமதானப்பணி) என்ற ஒன்று நடை பெறுவது வழக்கம் ஒவ்வொரு வீதீக்கு வீதீ மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்வது வழக்கம்//
பதிலளிநீக்குஅருமையான சிரம்தான்ப்பணி.
உங்கள் ஊருக்கு வந்து இருக்கிறேன். 5 நாட்கள் ஊரை சுற்றிப்பார்த்தோம்.
இவ்வளவு அழகான ஊரையும், சொந்தங்களை பிரிந்து அயல் நாட்டில் வாழ்வது மனது கஷ்டம் தான்.
காலம் மாறும். கவலைகள் எல்லாம் தீரும்.
வெகு சீக்கீரத்தில் நீங்கள் உங்கள் சொந்த ஊரில் உறவினர்களுடன் பண்டிகைகளை கொண்டாட வாழ்த்துக்கள்.
வணக்கம்
நீக்குஅம்மா
தங்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரத்தமும் சதையுமாக இதயத்திலிருந்து இறக்கிய உயிர்ப்பான நினைவுகள்... மிகவும் நெகிழ்ச்சியான பதிவு...
பதிலளிநீக்குத.ம.+
வணக்கம்
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான் ..... நைனா.. நாம் மட்டும்மல்ல நம்முடைய உறவுகள் எத்தனை பேர் இப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள்..... அவர்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட துயரங்கள்தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிரிவின் துயர்கள் மறைந்து வாழ்வில் இன்பம் பொங்கிடவே
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு
இன்பம் தரும் ஆண்டாக மலர்ந்திட வாழ்த்துக்கள் சகோதரா .
வணக்கம்
நீக்குசகோதரி
தங்களின் ஆறுதல் வார்த்தைகள் என்னைமட்டும் அல்ல பல உறவுகளை திருப்திப்படுத்தும்.. என்பது ஐயமில்லை... புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்