காதலன் காதலியை கற்பனை செய்யும் விதம். இசையும் கதையும் -2
தங்களின் கருத்தின் பிரகாரம் 3வது பகுதி தொடரும்.......
இந்த உலகத்தில் இறைவன் ஆணையும் பெண்னையும் படைத்தது இந்த பூமி பந்தத்தில் ஒன்றாக வாழ்ந்து இல்லறம் நல்லறமாக நடத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பெண் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். என்பதை அன்றோ பல நூல்களில் கூறியுள்ளார்கள்.சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியை எடுத்துக்கொள்ளலாம்.ஆவாதும் பெண்ணாலே இந்தபூமி அழிவதும் பெண்ணாலே. தெற்கு மதுரை சுடர் விட்டு எரித்தும் பெண்ணாலே.தாலிக்காயிற்றுக்கு பாசக்கயிறு என்றும் வந்ததும் பெண்ணாலே.இந்தியா தங்கப்பதம்வென்றதும் பெண்ணாலே. ஒரு பெண்தான் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணம் . அடுப்பங்கரையில் வேலை செய்கிறவர்கள் என்று கற்பனை பன்னக் கூடாது. அவர்களும் ஆண்களுக்கு சமமாக உள்ளார்கள் என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)திருமணம் என்ற வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை தருவது பிள்ளைச்செல்வம்தான் அந்த பிள்ளைச்செல்வம் பிறந்தவுடன் எவ்வளவு கற்பனைகள் கணவன் மனைவி இடையே செயல்வடிவம்மாக பிறக்கிறது அதிலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால் எவ்வாறு அழைகிறார்கள் என்று பார்த்தால் என்னசின்ன மகராணி மகளாக வந்தாள் தாய் தந்தயின் முகத்தில் சிரிப்பை கொடுத்தால் தங்கள் வீட்டில் உள்ள கடிகார நேரங்கள் எல்லாம் தன் மகளுக்காகவே சுற்றுகிறது. என்கிறார்கள். றோஜாப்பூவின் இதழும் ஒன்றே உன் முகமும் ஒன்றே நீ பிறந்ததால் எங்கள் வாழ்க்கை பாதை எல்லாம் மலர்மாலைவரவேற்பது போல எங்கள் உள்ளங்களை வரவேற்கிறது என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
காதலன் மக்கள் கூட்டத்தில் இருக்கிறான் அந்த நேரத்தில் அவனுடைய காதலி காதலனை தேடுகிறாள் அதைப் போல காதலனும் தன் காதலியை நினைக்கிறன் அவளுடைய கொழுசு சத்தம் அவன் காதில் கேட்கும் போது தொலைபேசி மணிஒலிப்பது போல ஒரு உணர்வு.அவளைக் கண்டவுடன் அவன் மனசில் மின்னல் ஒளி பாய்ந்தது போல ஒரு உணர்வு வந்தது. காதலன் அவளை நினைத்து பாடும் பாடலுக்கு இராகம் கொடுத்ததும் நீதானேஅந்த பாடலுக்கு அவளின் ஒளி மிக்க காதல் பார்வை அவன் நெஞ்சில் இசையாக யாழ் மீட்கிறதுவெளியில் உள்ளது எனக்கு பூக்காவனமாக தெரியவில்லை உன்னை நினைத்த நாளில் இருந்து நீயே எனக்கு பூங்கவனமும் பிரிந்தாவனமும் நீயே ஆகாயத்தில் இருக்கிற மேகத்தின் அழகை விட நீ தான் அழகு என்று காதலியை பார்த்து சொல்லுகிறான். .
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்
காதலன் பெண்னை நிலவுக்கு சமமாக ஒப்பிடுகிறான் நிலவானது பல தேசங்கள் பல நீர்ரோடைகள் கடந்து செல்லும் போது அதன் அழகு அழகுதான் அதுமட்டுமா மதுளையின் பூப்போல மலரகிறஇதழ் போலஉன் உதடு மானினங்கள் மீனினங்களும் பார்த்தவுடன் மயங்கும் விழியமைப்பும் அவளின் நெற்றி புருவம் வளைந்த வில்லைப்போலவும் அந் வில்லுக்கு பெண்ணின் பார்வையை அம்பாக உவமிக்கிறான் காதலன் அவளின் அந்த இளைமையான கட்டளைபருவம் ஒரு களமாக அவளின் குழிவிழுத்த கன்னத்தில் தேனின் சுவைக்கு சமமான சுவை என்று வர்ணிக்கிறான் முத்து பவளங்கள் போல அவளின் விரல்கள் அவளின் கழுத்து அழ்கடலில் எடுத்த சங்காக.இப்படியாக காதலன் காதலியை வர்ணிக்கிறான்
(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்
காதலன் முதல்காதல் அவனின் கற்பனையில் அவனுடைய காதலி அவனை தேடி வருகிறாள் அந்த வேலையில் வண்ணமாலைசூடவந்தாள். நூறுஜென்மங்கள் உன்னுடன் ஒன்றாக சேர்ந்திருப்பேன். அந்த நேரத்தில் பூக்கும் செடி எல்லாம் அவளின் வரவுக்காய் வரவேற்று சிரிக்கிறது அவனுடைய பார்வை அவள் வருவதற்கு முன் எட்டு திசை எங்கும் பார்த்த கண்கள்அந்த திசைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி தன் காதலியின் வருகையை பார்கிறான் என்னுடைய கண்ணுக்குள் உனது விம்பம்தான் என்னுடைய நெஞ்சுக்குள் உனதுநினைவுதான் என்னுடைய உள்ளம் கூட உன்னிடத்தில் என்னுடைய நிழலில் நீ நடக்க
எனது உயிரையும்
உனக்காக தருவேன் என்று காதலன் மிக அழகாக காதலியை பார்த்து வர்ணிக்கிறான் (PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-