புதன், 14 பிப்ரவரி, 2018

ஞாபகங்கள்.


அகத்தில் மலர்ந்த றோஜாவே.
உன்னை அணைத்து எடுத்தேன் பல காலம்
புன்னகைப் பூவே புகுந்தது வாசம்
பூத்த  பூ புதுவசந்தம் வீசியது.

 மழைக்கால இருளில் மதி மயங்கும் போது.
ஒற்றை குடையுடன் ஓடி ஒதுங்கிய
ஆலமரமும் தெருவோர கடையும்
நமது ஞாபகத்தை சொல்லுமல்லவா.

வேப்பமரத்து பிள்ளையர் கோயிலில்
வேள்விகள் நடந்த போது.
என் நெற்றியில் நீ வைத்த சந்தனம்
இன்னும் பத்திரமாய் இருக்குதடி.

ஒற்றை பாலத்தில் நாம் நடந்த போது.
தாவித் தாவி என்னை இறுக பிடித்த நேரம்
காலம் கடந்த போதும்
கண்ணுக்குள் நிழலாடுகிறது..

எனக்காக நீ தந்த காதலர் தின
பரிசான கடிகாரம்.
செக்கன் முள்ளு செக்கனுக்கு செக்கன்
துடிக்கும் போது.

உன் நினைவுகள் நெஞ்சோடு மோதுகிறது.

-நன்றி-

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நலமா? நெஞ்சில் எழுந்த நினைவலைகளோடு கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிறப்பு.
    அருமையான கவிதை. நீண்ட நாட்கள் ஆயின தங்களின் கவிதைகளை கண்டு. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்