சனி, 17 டிசம்பர், 2016

பெற்றவளே கண்ணீரில்.

கருவறையில் உன்னை பல காலம் சுமந்து.
இரு விழிகளிலும் கண்ணீர் மல்லக
இமையோரம் உன்னை இமைக்கும் நேரமெல்லாம்
விழி யோடு சுமந்தேன்.


வலியோடு உன்னை பெற்றெடுத்த தாய்யுள்ளம்
மடியோடு சுமந்து. மனதோரம் தாலாட்டி.
அன்பு மகனே என்று. ஆர்ப்பரிக்கும் -ஓசையில்.
என் காலம் கடக்கிறது.


நீ எட்டி எட்டி அடிவைக்க.
ஏழ் கடலும் துளைத்தெடுக்க.
எண்ணமெல்லாம் உன் நினைவு.
உயிராக கொல்லுதடா என் மனதில்


புத்தி கெட்ட மனிதர்கள் புயலாக வந்ததடா.
பூமியிலே. பொல்லாத காரியங்கள் நடக்குதடா.
போதை கொண்ட மனிதர்களும்
போர்க் குணமும் கொண்டார்கள்.


பொல்லாத கூட்டத்துடன் நீ சேர்ந்து.
தனியாக வாடுகிறாய் சிறையறையில்.
வேதனையில் துடிக்குதடா.பெற்ற மனம்
சோகத்தை பகிர யாருமில்ல.
சோதனையில் போகுதடா என் வாழ்க்கை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 

11 கருத்துகள்:

  1. போராளிகளின் தாயுள்ளம் படும் பாடு வேதனைக்குரியது !

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள் ரூபன் தம்பி! ஒவ்வொரு தாயும் தன் குழந்தை தவறான பாதையில் செல்லும் போது வருந்தித் துடிக்கும் மனதின் வரிகள்!

    வாழ்த்துக்கள்! தம்பி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்குரிய வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அன்னை நெஞ்சின் ஓலம்... மனதைப் பிசையும் வரிகள்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்