வெள்ளி, 18 நவம்பர், 2016

உதிரத்தில் வளர்ந்த மொழி


நற்தமிழே நாவூறும்செந்தமிழே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள்பிறந்து விட்டால்
கற்பனையாய் தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளமெல்லாம் தேனூறும்

இணையத்தில் தமிழே
இணையற்ற உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெண் மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய் நீ நின்று
பல வகை சொற்களும்
உன்னிலிருந்து மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது நம் மொழி
உதிரத்தில் பிறந்த மொழி
உள்ளத்தில்  வளரும் மொழி
ஆயிரம் வணக்கம் சொல்வோம்
அகிலத்தின் மொழியாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

6 கருத்துகள்:

  1. உண்மை அருமையாள தமிழ்க்கவி வாழ்த்துகள் நண்பரே
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. கவிஞர்ருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

  3. "இணையத்தில் தமிழே
    இணையற்ற உன் புகழே
    கோடி தமிழர்கள் உச்சரித்தால்
    உன் சுவையே மாறாது" என்பதை
    எல்லோரும் ஏற்று
    உலகெங்கும் தமிழைப் பேணுவோம்!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்