அகவிளக்கில்
மலர்ந்தவளே.
அகம்
முழுதும் எரிகின்றாய்உடல்முழுதும் நீ இருப்பாய்
உயிரெல்லாம் நீ வருவாய்.
திகட்டாத உருவமடி உன் மேனி
பட்டத்து பால் நிலவும்,
வெட்கி தலை குனியும் -உன் நிறம்.
வண்ணத்தில் நீ இருப்பாய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருப்பாய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்.
பொட்டழகு மின்னுதடி.
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு புன்னகையும் –செய்யுதடி.
எண்ணற்ற குறுஞ்செய்தி.
கைபேசி நினைவகத்தில்.
உன் நினைவை சொல்லுமடி..
தினம் தினம்.
காதலர் தினம் வரும் வரை
காலமெல்லாம் காத்திருப்பேன்-சீமாட்டி!
உன் அருகில் நான் இருக்க.!
காதலர் தினத்தில் 14-02-2016 மலேசியாவில் உள்ள பத்திரிக்கை தமிழ்மலரில் வெளிவந்தது.
10-02-2016 இலங்கையில் உள்ள பத்திரிக்கை மித்திரனில் வெளியாகிய எனது நேர்காணல்இதோ பார்வைக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய காலையில் நான் படித்த அழகான காதல் கவிதை.அருமையான பதிவு ஐயா..நம் தமிழ் எழுத்துக்களை தொடர்ந்து மலேசியா மக்களுக்கும் அழகிய நடையில் தாருங்கள் ஐயா.
பதிலளிநீக்குதமிழால் இணைவோம் நாம் தமிழராய் எழுவோம்..நன்றி..
வாழ்த்துகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குதம +1
அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
தம+1
நல்ல நடை. நன்கு ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குகவிதை அழகு!
பதிலளிநீக்குஅருமை சகோ
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உங்கள் எதுகையும் மோனையும் காதலியை இழுத்து வந்து விடும். அருமை
பதிலளிநீக்குஅருமையான கவிதை ரசித்தேன் வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குஇனிய எண்ணப் பகிர்வு
தொடருங்கள்
அருமை
பதிலளிநீக்குஅருமை கவிஞரே காதலின் ஏக்கம் எழுத்தில் வடிந்தது அருவியாய்.....
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகால மகள் கண்திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கிஇ.. கவலைப்பட்டே என்னையா
நாலு ப்க்கம் வாசல் உண்டு நில்லையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லையா...
காலம் வரும் காத்திருப்பாள்..!
காதல் கவிதை அருமை.
த.ம.5
அழகான ஒரு கவிதை சார்.. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரையிசைப் பாடல் போல அருமையான கவிதை..
பதிலளிநீக்குஅருமையான காதல் கவிதை!
பதிலளிநீக்குத ம 6
வணக்கம் ரூபன்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை, விரைவில் அருகில் சேர வாழ்த்துகள்!
காத்திருப்பு வீண் ஆகாது ரூபன் ஜி :)
பதிலளிநீக்கு“கன்னத்து குழியழகு
பதிலளிநீக்குகார்மேக முடியழகு” என்று இந்த வரியை மடக்கியிருந்தால் இன்னும் அழகு. (இதுபோல என் கருத்துகளைச் சொல்லாமல், சும்மா சூப்பர்...அடடா என்று பின்னூட்டமிட எனக்குத் தெரிவதில்லை. இப்படிப் போடும் பின்னூட்டங்களை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்றும் தெரியவில்லை ரூபன். அதனால்தான் பலரது பதிவுகளில் பின்னூட்டமிடத் தயங்கிக்கொண்டே...)
வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎன் காதலியை நினைவூட்டிய வரிகள்...அருமை கவிஞரே...
பதிலளிநீக்குஅருமைக்கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரூபன்...
பதிலளிநீக்குநல்ல கவிதை.
ரசித்தோம் ரூபன் தம்பி. வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு