வெள்ளி, 29 ஜனவரி, 2016

நதி நீராய் ஓடுதடி.

காதல் என்னும் பூக்கள் வந்து தூவும்
கண்ணில் வந்து நெஞ்சங்களும் மோதும்
உந்தன் பேரும்  எந்தன்பேரும்  நினைவுகளில்
வெள்ளி ஓடத்தில் நீயும் நானும் போவோம்

அள்ளி அள்ளி தந்த  காரங்கள் எல்லாம்
அன்பைச்சொல்லி சொல்லி காட்டுதடி.
நினைவெல்லாம் நீ இருக்க
கானவாக போனதடி  வாழ்க்கை

மல்லிகைப்பூ சூடிருக்கா
மங்களமாய்நீஇருக்காய் 
மாமன் நெஞ்சில்
தள்ளாட  -நினைக்கிறாய்.
கண்ணுப்பட்டு கண்ணுப்பட்டு
ஏங்கியதுஉள்ளம்.

சொந்த மனசும் வெந்து போனதடி
சோகத்தில் ஏங்குதடி உள்ளம்.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.

அன்பு நெஞ்சம் காட்டிடுவாய்
அள்ளி அள்ளி பருகிடவே.
எண்ணங்களும் உன் நினைவு.
நதி நீராய் ஓடுதடி.
யாரும் அற்று நான்  இருக்க.
ஆறுதலாய் நீ வருவாய்…….

24-01-2016 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ் மலரில் வந்த கவிதை

 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

19 கருத்துகள்:

  1. விரைவில் வருவாங்க...

    வாழ்த்துகள் தம்பி...

    பதிலளிநீக்கு
  2. அருமை கவிஞரே கவிதை வரிகள் நன்று வாழ்த்துகள்
    பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ரூபன் !

    வள்ளல் குணம் கொண்டவளே.
    வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.!

    மிக அருமை ரூபன் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  4. காதலி வரட்டும் கவலை தீரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. வற்றிய நதியில் பொங்கும் பூம்புனலாய் பாயும் நீர் ,அருமை :)

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் ரூபன்....

    பதிலளிநீக்கு
  7. உன் நினைவு. நதி நீராய் ஓடுதடி...mikka nanru Rupan
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  8. ஆறாய் ஓடுதடி..ஆறுதலாய் நீ வருவாய் ! - ஆஹா ! கடைசி வரிகளில் கவியழகு மிளிர்கிறது ! - வாழ்த்துக்கள் ரூபன் !

    பதிலளிநீக்கு
  9. வந்து விடும் ஆறுதல் வெகு விரைவில்/

    பதிலளிநீக்கு
  10. "யாரும் அற்று நான் இருக்க. ஆறுதலாய் நீ வருவாய்……."

    பார் போற்ற தேனாய் இனிக்க
    ஆறுதலை அள்ளித் தருவாள்

    அகத்தினுள் துள்ளி எழுவாள்!

    கவிஞரே!
    "கவிதை என்பது நினைத்தபோது வருவதல்ல!
    நெஞ்சம் கனத்த போது வருவது"

    - என்பதை வரிகள் பேசுகின்றன!

    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை
    அமையட்டும் விரைவில் இனிமை...

    தம. அ

    பதிலளிநீக்கு
  12. மிகவும் இரசித்தேன்
    ஒரு கவிதைக்குள் இரு நிலை வார்த்தைகள்
    இல்லாது இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ ?
    ( இலக்கியச் சொற்களும், நடைமுறைச் சொற்களும் )

    பதிலளிநீக்கு
  13. அன்பு நெஞ்சம் காட்டிடுவாய்
    அள்ளி அள்ளி பருகிடவே.
    எண்ணங்களும் உன் நினைவு.
    நதி நீராய் ஓடுதடி.
    யாரும் அற்று நான் இருக்க.
    ஆறுதலாய் நீ வருவாய்…….



    நண்பரே கடைசி வரிகள்
    அனைத்தும் எனக்கு அதிகமாக
    பிடித்திருக்கிறது....

    வாழ்த்துக்கள் தொடர்க பதிவுகள்...

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்