திங்கள், 2 ஜூன், 2014

தடைகளை தாண்டிய வெற்றிப்படிகள்

 
தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன்&பாண்டியன் நடத்திய சிறப்புக்கட்டுரைப்போட்டியில் வலையுலகில் சாதனை படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முதலில்.அத்தோடு படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்பல.
பரிசுப்பொருட்கள்:-சான்றிதழ்&பதக்கம் அனுப்பட்டுள்ளது சிலநாட்களில் வந்தடையும் என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன் 
 
 
 
 
 
 
 
 
வலையுலகம் பரந்து வரிந்த நீலக்கடல் போன்றது அதில் தங்களின் சிந்தனை ஆற்றலில் மலர்ந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து பல கட்டுரைகளை உருவாக்கியது வந்த படைப்புகளில் எல்லாம் நன்றாகவே இருந்தது இருந்தும் மிக திறமையான கட்டுரைகளை மிகவும் திறமை மிக்க நடுவர்கள் கொண்டு இனங்காணப்பட்டது.
நடுவர்களாக கடமையாற்றிய -

கவிஞர் -திரு.நா.முத்து நிலவன் ஐயா)
கவிஞர் -திரு.இரா.செல்லப்பா ஐயா.
கவிஞர்- திரு.ரமணி ஐயா
கவிஞர்-திரு.குவைத் வித்யாசாகர்(அண்ணா)

ஆகிய நான்கு நடுவர்களிடமும் நான் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு நடுவராக இருக்கவேண்டும் என்று சொல்லியபோது மனம் தளராமல் நாங்கள் சிறப்பாகசெய்வோம் என்று சொன்னார்கள் அவர்களுக்கு நான் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்….
போட்டி சம்மந்தமாக திரு. பாண்டியன் சகோதரன் அவர்களிடம் சொல்லியபோது. நாம் இருவரும் இணைந்து செய்வோம் என்று சொன்னார்அவர்கள் ஒத்துழைப்பு நல்கியமைக்கு எனது நன்றிகள்….
திரு தனபாலன் (அண்ணா)அவர்கள் இடமும் சொல்லியது போது…..செய்வோம் என்று பதில் சொன்னார் வரும் கட்டுரைகளை நடுவர்களுக்கு சிறப்பாக தொகுத்துஅனுப்பும் பணியை செய்தார்அத்தோடு இன்னும் எனக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு நல்கி வரும் தனபாலன்(அண்ணாவுக்கு )எனது நன்றிகள் பல….
வலையுலக நண்பர்களே மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்….அடுத்த போட்டியில் சந்திப்போம்.
வெற்றி பெற்ற படைப்பாளிகள் கட்டுரைகளை கீழ்காணப்படும் இணைப்பில் சொடுக்கி படிக்கவும்

1.திரு.ஈ.சீ. சேஷாத்ரி
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.திருமதி.இனியா
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.கீதமஞ்சரி
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏழு ஆறுதல் பரிசுகள்: சான்றிதழ்கள் பெறுபவர்கள் விவரம்:

* Karthikeyan L
கட்டுரைத் தலைப்பு : உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*Dineshsanth S
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*PSD PRASAD
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கிரேஸ்
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*yarlpavanan
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கோவை.மு.சரளா
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*Chokkan Subramanian
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-



 

 




-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. வணக்கம் ரூபன் பாண்டியன் அவர்களே !
    இந்த சிறு வயதிலே இவ்வளவு ஆற்றல் மிகுந்த செயல்கள், எண்ணங்கள், தமிழ்வளர்க்கும் ஆர்வம் என்னை வெகுவாக கவர்ந்தது. உண்மையில் என்னை ஆச்சரியப்படவைக்கிறது. அப்படிப்பட்ட தங்கள் மூலம் பரிசும் உன்னால் எழுதமுடியும் என்னும் அங்கீகாரம் கிடைத்ததும், அளித்ததும் பெருமைக்குரிய விடயமே.மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்...! உரித்தாகட்டும்.
    இப்படியான நிகழ்சிகள் இன்னும் எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை அனைவருக்கும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் முக்கியமாக தம் நேரத்தையும் பொருட்படுத்தாது பல விதமான கடமைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் பதிவுகளை ஆராய்ந்து பொறுமையாக சிறந்த கட்டுரைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களாகிய :-
    கவிஞர் -திரு.நா.முத்து நிலவன் ஐயா)
    கவிஞர் -திரு.இரா.செல்லப்பா ஐயா.
    கவிஞர்- திரு.ரமணி ஐயா
    கவிஞர்-திரு.குவைத் வித்யாசாகர்
    முழு ஒத்துழைப்பு நல்கிய சகோதரர் திரு. தனபாலன் அவர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவிக்கிறேன். அத்துடன் பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......! தமிழ் வளர்ப்போம் ஒருங்கிணைந்து ! வாழ்க தமிழ் ..! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா.

      தங்களின் அன்புள்ளம் கண்டு என்மனம் உவகை கொண்டது. இப்படியான அன்புள்ளங்கள் இருக்கும் வரை எங்களின் பணி தொடரரும்.. அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லி எழுதிய கருத்துக்கு மிக்க நன்றி அம்மா.

      தங்களின் முகவரிக்கு பரிசுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.. மிக விரைவில் வந்தடையும் என்பதை மீண்டும் மீண்டும் அறியத்தருகிறேன்...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. எத்தனையோ தடைகளைக்குப் அப்பால்
    போட்டி நாடாத்திப் பரிசில் வழங்கும்
    தங்களின் தமிழ் பற்றுக்கு
    எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா.

      தங்களின்வருகைக்கும் பாராட்டி எழுதிய கருத்துக்கும் மிக்க நன்றி உங்களைப்போன்றோரின் வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும் வரை எம்மொழி வாழும் எங்களின் சேவையும் தொடரும்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. வெற்றி பெற்ற என் அருமை வலைத் தள சொந்தங்கள் அனைவருக்கும் என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கும் இங்கே நடுவர்களாக
    விளங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் அன்புச் சகோதரனே .இப் போட்டியின் வாயிலாக
    தாங்களும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் ஆற்றி வரும் இப்பணி
    தொடர்ந்தும் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா.

      தங்களின் வருகையும் கருத்தும் எங்களை மேலும் உச்சாகப்படுத்துகிறது அயராது உழைத்த நடுவர்களுக்கும் ஏனைய நிருவாக குழுக்கும் நன்றிதெரிவித்தமைக்கு மிக்க நன்றி தங்களின் வற்றாத ஆதரவு இருக்கும் வரை அடுத்த போட்டி அதிரடியாக ஆரம்பம்விரைவில்.....என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இது போன்ற போட்டிகள் நடத்தி வலையுலக எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்க்கும் இந்த சேவையை செய்யும், தங்களுக்கும், பாண்டியன் தம்பி அவர்களுக்கும், DD அவர்களுக்கும், மர்றும் நடுவர்களுக்கும் எங்கள்வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! தங்கள் பணி செவ்வனே வளர எங்கள் வாழ்த்துக்கள்! தம்பி ரூபன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    போட்டியை சிறப்பாக நடத்திய உங்களுகுப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்