சகோதரி திருமதி -கிரேஸ் அவர்கள் என்னை பத்து கேள்விகள் கேட்டு பத்துக்கும் பதிலளிக்கவும் என்று சொல்லிவிட்டார். என் விடைத்தாள் இங்கே
கேட்டவுடன் என்தலை தலைப்பு சுற்றுவது போல சுற்றியது.
1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்பது பொய்யான விடயம் மரணம் எப்போதும் உறுதி என்ற வாழ்க்கையை நினைத்து வாழ்பவன். இருந்தாலும் 100வது பிறந்த நாள் கிடைக்கும் போது பெற்ற தெய்வங்களை இழந்த செல்வங்களுடன் கொண்டாட விரும்புவேன்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பிறர் உழைப்பில் வாழாமல் என்னுடைய உழைப்பில் வாழ வேண்டும் என்ற என்ற வாக்கிய தொடரை தினம் தினம் என்னுள் புகுத்திக் கொள்வேன்.
3.கடசியாக சிரித்தது எப்போது?எதற்காக?
இறுதியாக தாயகத்தில் இருந்து விடைபெறும் போது.எதற்காக- உயிருக்கு உயிராக தாய் தந்தையருக்கு தெரியாமல் காதல் வளர்ந்தது நான் வெளிநாடு செல்கிறேன் என்ற தகவல் அறிந்த போது தொலைபேசியில் SKYPEவழியாக காதலியுடன் சிரித்த சிரிப்புத்தான்.அன்று .
4.24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
நண்பர்களுடன் இரவில் தூங்கும் போது யார் என்று இருட்டில் தெரியாது அதனால் கிள்ளிவிட்டு ஓடிப்போய் தூங்குவது ...
5.உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
பிறர் மிதிக்க நடக்காதே பிறர் மதிக்க நட என்று சொல்வேன்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
பக்கத்து வீட்டுக்காரன் நல்ல செல்வத்துடன் இருந்தால் அதைப்பார்த்து செய்வினை சூனியம் செய்யும் மந்திரவாதிகளையும் ஏமாத்தி பிழைக்கும் தந்திர வாதிகள் போன்றோரினால் உருவாகும் பிரச்சினையை தீர்ப்பேன்.
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என்வயதுக்கு மூத்தவர்களிடம்
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
கீதையில் சொல்வது போல எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும்இடக்காதில்வேண்டி வலக்காதில் விட்டுவிடுவேன்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
மரணம் என்பது யாரை விட்டு வைத்தது. இவைஎல்லாம் இயற்கையின் நியதிஎப்போது தாயின் வயிற்றில் இருந்து மண்ணின் மடியை தாவிய போது.அப்போதே மரணம் என்பது உண்மையாகி விட்டது. என்று சொல்லுவேன்.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
எப்போதும் புத்தகம் வாசிப்பதும் அத்தோடு எனக்கு பிரியமான ஒரு பாடம் என்றால் போட்டோசப்(ADOBE
PHOTOSHOP) இதில்தான் நான் பொழுதை கழிப்பது.அதிகம் அன்றும் இன்றும்1. நாகேந்திர பாரதி
2. சின்னப்பயல்
வணக்கம் ரூபன்.
பதிலளிநீக்குஆமாம், தலைப்பு இந்த சுற்று சுற்றுகிறதே! வலைத்தளத்தில் சுற்றுகிறோம் என்று தெரிந்துகொண்டது போல... :)
பதிவிற்கு நன்றி. பதில்கள் அருமை, என்றாலும் ஒரு சோகம் தெரிகிறது. ஈழப் பிரச்சினை முடிவிற்கு வந்து சகோதரர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்..விரைவில் வர வேண்டும் அந்த நாள். "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்...தருமம் மறுபடியும் வெல்லும்" ஈழச் சகோதரர்கள் வாழ்வை வெகுநாட்களாய் சூது கவ்வியிருக்கிறது...விரைவில் அது தோற்கவே வேண்டும்..தோற்கவே செய்யும்.
நீங்கள் அழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம்
நீக்குசகோதரி
தங்களின் முதல் வருகையும் நல்ல மகிழ்ச்சிஅளிக்கும் தகவலை பரிமாறிக்கொண்டமைக்கு எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக அருமையாக விடை அளித்திருகிறீர்கள் சகோ. சில கண்ணீர் கரை கட்டுகிறது. அருமை
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குசகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன் ஒவ்வொருவரின் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் நிச்சயம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அட...
பதிலளிநீக்குஎதார்த்தமான பதில்கள் ..
வணக்கம்
நீக்குசகோ.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை...
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குசகோ
இரசித்துப்படித்து அருமை என்று சொல்லியமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும்!
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
/// பிறர் மதிக்க நட ///
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க தம்பி...
வணக்கம்
நீக்குஅண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலிக்கும் பதில் ஈழம் குறித்தவை..
பதிலளிநீக்குகுறும்பு மின்தடை..
ரசித்தேன்...
வாழ்த்துக்கள்
சகோ..
www.malartharu.org
வணக்கம்
நீக்குஉன்மைதான் தாயத்தில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்கையும் ஏதோ சோகம் இருக்கத்தான் செய்யும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் பதில்கள் கண்டும் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை சகோ!
பதிலளிநீக்குஎண்ணங்களில் வழிந்தோடும் எங்கள் தேசம், உறவுகள் இவைதானே என்றும் எம் நினைவுகளில்...
உங்கள் பதில்களிலும் அவை நன்கே புலப்படுகிறது. அருமை!
பகிர்தலுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!
நானும் நீங்கள் பதிலளிக்க அழைத்த ஒருவரை என் பதிவிலும் அழைத்துள்ளேன்...
வணக்கம்
நீக்குசகோதரி
நீங்கள் சொல்வது உண்மைதான் தாயகத்தில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் சிதைந்துதான் கணப்படுகிறது. வாழ்வோம் என்பது பொய் மரணம் என்பது நிச்சயம் என்ற வாக்கியத் தொடர் எப்போதும் புகுந்த வண்ணம் இருக்கும்
அது பிரச்சினை இல்லை யார் அழைத்தால் என்ன பதிவாக வலம் வந்தால்சரிதான் சகோதரி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எல்லா பதில்களும் அருமை அதில் முதலாவது மனதை தொட்டது. நன்றி நண்பரே.
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா.
தங்களின் இரசிப்புத்தன்மையை பாராட்டுகிறேன்... குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எளிமையான பதில்கள்..
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குசகோ
வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி சகோ
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குறும்பான பல பதில்கள், இருப்பினும் ஊரின் பிரிவு அங்கங்கு தென்படத்தான் செய்கிறது.. கவிதைக்கான குறும்பு மொழி பல பதில்களில்... நடத்துங்க ரூபன் :)
பதிலளிநீக்குஅப்பப்ப என்னையும் டேக்'(Tag) பண்ணுங்க :)
வணக்கம்
நீக்குஐயா
கட்டாயம் எப்போதும் தங்களின் பால் அன்பு உள்ளது ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழைத்ததற்கு நன்றி ரூபன். என் பதில்கள் .
பதிலளிநீக்கு1. இருந்தால், ஆரோக்கியத்தோடு .
2. வங்கி இயலை, கவிதையை .
3. பேத்தியோடு விளையாடிய போது .
4. கை விசிறி வாங்கிக் கொள்வேன் .
5. வாழ்க வளமுடன் , நலமுடன் .
6. வறுமை, வன்முறை .
7. பிரச்னை புரிந்த பெரியவர்களிடம் .
8. பரப்புவரைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு.
9. வாழ்வின் நிலையாமையை .
10. புத்தகம், டி வி , கம்ப்யூடர்.
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி் பதில்கள் எல்லாம் அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா ஹா மாட்டியாச்சா ரூபன். அருமையாக எதார்த்தமாக பதில்கள் தந்து தப்பித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குவாழ்க வாழ்க !
வணக்கம்
நீக்குஅம்மா
பல பதிவுகளை பார்த்து வந்து கருத்தும் போட்ட பின் சகோதரி திருமதி கிரேஸ்(தேன்மதுரைத்தமிழ்) அவர்கள் மாட்டீவிட்டர்கள் என்ன செய்வது. செய்துதான் ஆகவேண்டும.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தம்பி ரூபன்! ஹோ! அருமையான பதில்கள்! அசந்துவிட்டோம்! சில பதில்கள் மனதை நெகிழ்த்தியது என்னவோ உண்மை தம்பி!
பதிலளிநீக்குதங்கள் அன்பான இதயம்....தங்களுக்கு எல்லா நன்மைகளும், சந்தோஷமும் தர எல்லாம் வல்லை இறைவனை வேண்டுகின்றோம் தம்பி!
வணக்கம்
நீக்குஅண்ணா
தங்களின் மனசில் இருந்து பிறந்த கருத்தை கண்டு என் மெய்யது குளிர்ந்தது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பதில்கள்......
பதிலளிநீக்குசில பதில்கள் சிந்திக்க வைத்தன..
வணக்கம்
நீக்குஐயா.
இதுதான் எங்கள் வாழ்க்கை என்பதை உணர்ந்து போது ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிந்திக்க வேண்டிய பதில்கள்---
பதிலளிநீக்குநெஞ்சம் மறக்கா நினைவிடங்களாகிப்போன சொந்த தேசம்...நெகிழ்ச்சி.
வணக்கம்
நீக்குஐயா.
தாயும் தாய் நாட்டையும் மறக்க முடியாது. கருத்தை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மன்னிக்க சகோ ரூபன் தாமதமான நன்றியறிவித்தலுக்கு. என் பக்கம் நன்றி சொல்லிவிட்டேன். உங்க பக்கம் வருவதும் முதல் தடவை.நினைப்பது செயல்படுத்த முடியவில்லை. யாதார்த்தமான பதில்கள் தங்களுடையது.
பதிலளிநீக்குஉங்க மனக்கருத்தை வெளியிட்டிருக்கிறீங்க. நன்றி.
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முதல் வருகை கண்டு மனம் உவகை கொண்டது. வாருங்கள் வாருங்கள். அன்புடன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதில்கள் மனதை தொட்டன. பாராட்டுக்கள்...... முதல்தடவையாக நான் உங்கள் தளம் வருகிறேன் ..நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வருகிறேன்
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஅண்ணா.
தங்களின் வருகை கண்டு என் மனம் உவகை கொண்டது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வாருங்கள் வந்து ஆசீர்வாத் செய்யுங்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மிகவும் ரசிக்கும் படியான பதில்கள்.அருமை தோழர்.
பதிலளிநீக்குவணக்கம் தம்பி ரூபன். நீங்கள் எதார்த்தமாகவே சொல்லிவிட்டீர்கள். படிக்கப் படிக்கக் கலங்கிப்போனேன்... இதிலும் நகைச்சுவையொடு வாழக்கற்றுக்கொண்ட விதம்தான் வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுதரும். வாழ்த்துகள். நன்றி
பதிலளிநீக்கு//பிறர் உழைப்பில் வாழாமல் என்னுடைய உழைப்பில் வாழ வேண்டும் என்ற என்ற வாக்கிய தொடரை தினம் தினம் என்னுள் புகுத்திக் கொள்வேன்.//
பதிலளிநீக்கு2 தனித்துவம்.
எல்லா பதில்களும் அருமை
இதுதான் என் முதல் வருகை. நிதானமாக எல்லாம் வாசிக்க வேன்டும்.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் பார்த்தேன் நானும் எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஎல்லோரதையும் வாசிப்பதும் ஓர் ஆர்வம் தானே.
பாராட்டுகள். well come to my site.
வேதா. இலங்காதிலகம்.
கேள்வி பதில்கள் பார்த்தேன் நானும் எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஎல்லோரதையும் வாசிப்பதும் ஓர் ஆர்வம் தானே.
பாராட்டுகள். well come tomy site.
வேதா. இலங்காதிலகம்.
எதார்த்தமான பதில்கள். வாழ்த்துக்கள் ரூபன்.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும்
பதிலளிநீக்குசிறந்த பதில்களால்
பதிவு சிறக்கிறது!
அன்பிற்கினிய நண்பர் ரூபன் அவர்களுக்கு இனிய வணக்கங்கள்! தங்களின் கருத்துக்களுக்கும் வலைச்சரத்தில் எமது வலைப்பூவை அறிமுகம் செய்துள்ள காவியகவி அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள் பல. தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்க விழைகின்றேன். என்றும் அன்புடன் அன்புநெஞ்சம் பெட்டகம் A.S. முஹம்மது அலி.
பதிலளிநீக்கு