வெள்ளி, 23 ஜூன், 2017

இழந்தது போது தமிழினமே!!

சுமைகள் சுமந்த வாழ்வுக்கு.!
சுகங்கள் தேடி தந்தார்கள்!
நம் மூத்தோர்கள்.!
பெற்ற சுதந்திரம்!
பெற்ற உரிமையும் மறுக்கப்பட்டு!
வீதியோரங்களிலும் நிழல் மரங்களிலும்!
நிம்மதி இழந்த வாழ்வாக!
வாழ்கிறான் தமிழர்கள்!

ஆயிரம் கட்சிகள் ஆயிரம் கொடிகளும்!
ஆரவாரம் செய்ய!
சாதியும் மதமும் இறுமாப்பு காட்டி!
ஏறுகிறான் சொற்ப சிம்மாசனம்!
ஐந்து வருடங்கள்!
ஈழத்திலும் வர்மாவிலும் தமிழனின்!
உயிர்கள் நயவஞ்சகர்களின் கையில் துடிக்க!
மலாய மண்ணில் தமிழன் உரிமை மறுக்கப்பட!
தமிழனின் எதிர்காலம்!
மரணக் குழியில் புதைந்து கிடக்கிறது!

அவலங்கள் கண்டு துடிக்காத!
தமிழ் தலைமைகள்!
இருந்தென்ன இலாபம்.!
தமிழ் மக்களே! பணத்துக்காக,!
அற்ப சுகத்துக்காக உங்களின்!
உரிமையை விலை பேசாதீர்கள்!
பொன்னான உரிமையை மண்ணாக்காமல்!
எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட!
வரும் காலத்தில் சிந்தித்து.

நம் உரிமையை செலுத்துவோம்!

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- 

12 கருத்துகள்:

  1. தமிழுக்கு எங்கும் பிரச்சனை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அக்கா

      வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அருமை கவிஞரே எதிர்கால சந்ததிகளுக்காக வாழ்வோம்
    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. தமிழனுக்கு என்றோர் நாடு ஒன்று இருந்தால் இந்நிலை வருமா :)

    பதிலளிநீக்கு
  4. அரசியல்வாதிகளுக்கு ஏது இனப்பற்று எல்லாம் பொருட்பற்றும் பொன்பற்றும் பெட்டியில் கொடுத்தால் விலைபோவோர்! கவிதை அருமை சகோ!

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தம் சொல்லிப்போகும்
    அற்புதமானக் கவிதை
    கொஞ்சம் சுடத்தான் செய்கிறது
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  6. //எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட!
    வரும் காலத்தில் சிந்தித்து.

    நம் உரிமையை செலுத்துவோம்!//

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  7. என்னதான் சொன்னாலும் மாறவேமாட்டோம் என்பவர்களிடம் என்ன கூறுவது? (தலைப்பில் தழிழ் என்றுள்ளது)

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ரூபன் !

    பற்றுளான் என்று பறைசாற்றும் பாவிகள்
    இற்றரைக்கு வேண்டாம் இனி !

    வாழ்க தமிழ்

    பதிலளிநீக்கு
  9. கள நிலமை அப்படி
    தளபதி. தலைமை இழுபறி
    தமிழுக்கும் தமிழருக்கும் இழுக்கு!

    பதிலளிநீக்கு
  10. அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
    சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
    தொடர்புகளுக்கு : editor@sigaram.co

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்