வெள்ளி, 29 ஜனவரி, 2016

நதி நீராய் ஓடுதடி.

காதல் என்னும் பூக்கள் வந்து தூவும்
கண்ணில் வந்து நெஞ்சங்களும் மோதும்
உந்தன் பேரும்  எந்தன்பேரும்  நினைவுகளில்
வெள்ளி ஓடத்தில் நீயும் நானும் போவோம்

அள்ளி அள்ளி தந்த  காரங்கள் எல்லாம்
அன்பைச்சொல்லி சொல்லி காட்டுதடி.
நினைவெல்லாம் நீ இருக்க
கானவாக போனதடி  வாழ்க்கை

மல்லிகைப்பூ சூடிருக்கா
மங்களமாய்நீஇருக்காய் 
மாமன் நெஞ்சில்
தள்ளாட  -நினைக்கிறாய்.
கண்ணுப்பட்டு கண்ணுப்பட்டு
ஏங்கியதுஉள்ளம்.

சொந்த மனசும் வெந்து போனதடி
சோகத்தில் ஏங்குதடி உள்ளம்.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.

அன்பு நெஞ்சம் காட்டிடுவாய்
அள்ளி அள்ளி பருகிடவே.
எண்ணங்களும் உன் நினைவு.
நதி நீராய் ஓடுதடி.
யாரும் அற்று நான்  இருக்க.
ஆறுதலாய் நீ வருவாய்…….

24-01-2016 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ் மலரில் வந்த கவிதை

 -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 14 ஜனவரி, 2016

தை மகளே நீவருக


தை மகளே நீவருக
தரணி எல்லாம் உன் பேச்சு
தைமகளே நீ வந்தால்
குறைகள் எல்லாம் தீர்ந்திடுமே

 ஊரெல்லாம் உறவழைத்து.
கொத்து மஞ்சள் கட்டிவைத்து
புதுக்கோலம் நாம் போட்டு.
பால் பொங்கி வருகையிலே.
பட்டசு வெடிக்கையிலே.
புதுபானையிலே....
வெண்நிற நட்சத்திரம்
சிரிக்குதடா....
சின்ன சின்ன மத்தப்பு
கைகளில்சிரிக்க....
சின்னஞ் சிறு பிள்ளைகளும்
துள்ளுதடா.....

ஆதவனே உன்வருகையில்
மானிடனுக்கு ஒளிவிளக்கு
ஏர் பூட்டி நிலம்உழுத
காளைகளை -வணங்க
அன்றே...அமைத்தான்
தைத்திருநானை தமிழன்
இன்றே நினைவு கூறுகிறோம்.
எம் இனமே.....



இந்தியாவில் இருந்து வெளிவரும் இனியநந்தவனம் இதழில்  சிறப்பு பொங்கல் மலரில் வெளிவந்த கவிதை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 6 ஜனவரி, 2016

நாகரீகம் என்ற பெயரால்…………


மனித நாகரீகம் என்ற போர்வையில்
மனிதம் மனிதத்தை மாசுபடுத்தி
வாழ்கிற வாழ்க்கையாக மாறிவிட்டது.இன்று
அன்று ஒரு காலத்தில் பெண்ணால்
பெண்மையை போற்றி வாழ்ந்தாள்
இன்றைய நாகரீகம் என்ற போர்வையில்
அரை தெரிய உடையும்
ஆடை என்ற போர்வையில்
உடல் தெரிய அங்கவஸ்திரமும்
ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிட்டது.


அப்பா அண்ணா சொந்தங்கள்
என்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு
கவர்ச்சி உடையை அணிந்து.
ஆண் வர்க்கத்தின் மனநிலையை
பல திசைகளில் திசை திருப்பி
பெண்மையை சீரழித்ததும்
கலாசாரம் என்ற போர்வையில்
வலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.

 
நவீன உடை என்ற போர்வையில்
கலாசாரத்தை சீரழிக்க பவனிவரும்
ஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு
தமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்
நம் பண்பாட்டையும் சொல்லும்
உடைகளை வாங்கி
நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி
அன்பான தமிழனாய் வாழ்வோம்.

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

குறிப்பு-

நிர்வாணம் என்பது அழகானது..அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.
இதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.

நாகரீகம் என்ற போர்வையில் வரும் அரை குறை ஆடைகள்தான் பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது

03-01-2016 ஞாயிறு தமிழ்மலர் பத்திரிகையில் வெளிவந்தவை.மலேசியாவில்