வியாழன், 1 அக்டோபர், 2015

எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீட்டு புகைப்படங்களின் தொகுப்புக்கள்.


 

 






















மலேசியத் தலை நகர் கோலாலம் பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள்
மண்டபத்தில் எனது ஜன்னல் ஓரத்து நிலா என்னும் கவிதைப் புத்தகம் மிகச் சிறப்பாக வெளியீடு செய்ப்பட்டுள்ளது. இன் நிகழ்வை மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியும் இனியநந்தவனப்பதிப்பகமும் இணைந்து நடத்தியது.இன் நிகழ்வில் பெரு வாரியான  இலக்கிய வாதிகள் பங்கு பற்றி.


 
 























சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் பரத நாட்டிய நிகழ்வும் இடம் பெற்று நிகழ்வுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
 

 எனது ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூலை  கனடா உதயன் இதழியல் ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம் அண்ணா வெளியிட முதல் நூலைமுனைவர் திரு. முரசு ராஜன் ஒரு தொகை பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.


அத்தோடு புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் முத்து ஐயாவும் நிகழ் வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்


 

 
























இந்த நிகழ்வில் எனக்கு கலைவேந்தர் என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது.விருது வழங்கிவைப்பவர் குவைத் நாட்டில் இருந்து வருகைதந்த தொழில் அதிபர் திரு.Dr.S.M.ஹைதர் அலி மற்றும் இனியநந்தவனம் பதிப்பக ஆசிரியர்

 
 






















அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர் திரு இராஜேந்திரன் ஐயா அவர்களால் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து நினைவுப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.








 
























அத்தோடு மலேசிய எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் பெருமால் மோகன் அவர்களால் போர்வை போர்த்து மரியாதை செய்யப்பட்டது..

 
 
























அத்தோடு மலேசியா விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ. சரவணன் அவர்கள் நிகழ்வுக்கு வந்த போது. நேரில் சந்தித்து பேசியபோது எடுத்த படம்
 

 




























அத்தோடு இன் நிகழ்வுக்கு.

1.தலைமைவகித்த

ஜேக்கப் சாமு வேல் (சிப்பாங் ..கா தொகுதித்தலைவர்)-மலேசியா

 
நிகழ்வுக்கு முன்நிலை வகித்தவர்-

இனியநந்தவனம் சந்திர சேகர்

 (புதிப்பக ஆசிரியர்)-இந்தியா

 

3.வாழ்த்துரை வழங்கியவர்கள்

திரு ஆர் என். லோகேந்திரலிங்கம்(கனடா உதயன் இதழியல் ஆசிரியர்.)

திரு K.P.சாமி (தேசிய ..கா. மத்திய செயலவை உறுப்பினர்-மலேசியா).

திரு. இராஜேந்திரன்.(மலேசிய எழுத்தாளர் சங்க வெளியகத் தொடர்பாளர்)

திரு.Dr.S.M.ஹைதர் அலி(தொழில் அதிபர்-குவைத்.)

திரு.முனைவர் வி. முத்து. புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர்.

இன் நிகழ்வை ஒருங்கினைப்பு செய்த திரு .ஆறுமுகம் செல்லத்துரை ஐயா அவர்களுக்கு. டெங்கில் கிளை இந்தியர் காங்கிரஸ் கட்சி தலைவர் முனியாண்டி கந்தசாமி ஐயாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..









 
 






















அத்தோடு சாதனையாளர்ருக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்று அத்தோடு இரவுநேர உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் நானே கடமை ஆற்றினேன்.விருது பெற்றோர் படங்களும்.அத்தோடு
காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழக துனைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவகளும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் கவிஞர் சு.பீர்முகமது ஐயாவும் எனது நூலை பெற்ற போது












 






 

 
 
 
 
























தீபாவத்திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி சம்மந்தமான பதிவை பார்வையிட இதோ
ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றம் என்ற வலைப்பூ பக்கம் செல்லுங்கள்.. உங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் எனது புத்தகம் விற்பனைக்கு வருகிறது... என்பதை அறியத்தருகிறேன் மகிழ்ச்சியாக
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாளை சந்திக்கிறேன்  பத்திரிகை செய்திகளுடன்...

21 கருத்துகள்:

  1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விழாவின் மகிழ்ச்சியை வண்ணப் படங்கள் வெளிப்படுத்துகின்றன. உங்களது ‘ஜன்னல் ஓரத்து நிலா”, புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பினில் விற்பனைக்கு வந்தால் என்னைப் போன்றவர்கள் வாங்க வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      நிச்சயம் வருகிறது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு.அங்கு பெற்றுக்கொள்ளலாம் ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. நூல் வெளியீட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. மென்மேலும் தாங்கள் பல சாதனைகள் புரிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    எழுத்துப் பணி தொடரட்டும்
    சாதனைகள் பல படைக்கட்டும்
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்கள் ரூபன் மென்மேலும் பல படைப்புகள் படைத்து புகழ் பெற என் வாழ்த்துக்கள் ...!
    அனைத்தும் நேரில் கண்டு களித்தது போல் உள்ளது விபரமான தொகுப்புகள் படங்களுடன். நன்றி !

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    ‘ஜன்னல் ஓரத்து நிலா’- கவிதை நூல் வெளியீட்டு புகைப்படங்களின் தொகுப்புக்கள் பார்த்து மகிழ்ந்தோம். விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். பாராட்டுகள்...வாழ்த்துகள்!

    புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் தங்களது புத்தகம் விற்பனைக்கு வருகிறது... என்பதை அறிந்து மேலும் மிகுந்த மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. தம்பி அசத்தல் படங்கள்... வாழ்த்துகள்...

    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  7. ஆகா அருமையான நிகழ்ச்சி! படங்களும் நன்று! ரூபன் மேலும் பல நூல்களை எழுதி வெளியிட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. படங்களும் பெருமை சேர்ந்த தருணப் பதிவும் மிக அருமை சகோதரரே!

    மேலும் மேலும் இனியன எல்லாம் உங்கள் வசம் அமைய வாழ்த்துகிறேன்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  9. விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. மென்மேலும் பல சாதனைகள் புரிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் ரூபன்.வெற்றிகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  11. மிக்க மகிழ்ச்சி ரூபன் மென்மேலும் இது போன்ற பல காவியம் படைக்க எமது வாழ்த்துகள் புகைப்படங்கள் அழகு
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  12. விழா நிகழ்ச்சி பற்றிய பதிவு மிக அருமை ரூபன். இன்னும் பல நூல்களை எழுதிட வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் கவிஞரே!
    மிக்க மகிழ்ச்சி!!!
    அழகிய புகைப் படங்கள் தந்து
    விழாவின் சிறப்பை அறிய தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!
    மேலும் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
    நன்றி!
    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  14. மேலும் பல ஆக்கங்கள் படைக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. கலைவேந்தர் ரூபனுக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ரூபன் !

    அனைத்துப் படங்களும் அருமை நல்ல சந்திப்பு இலக்கியவாதிகள் கூடியதால் தொடர்ந்து தமிழ்த்தொண்டு செய்கவென நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

    பதிலளிநீக்கு
  18. படங்கள் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வை பெற்றோம். இலக்கிய பணியில் மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள் ரூபன்===சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் ரூபன் காட்சியை தத்ரூபமாக பதிவாக பகிர்ந்து சிறப்பித்ததுக்கு! உங்கள் நூல் இங்கும் வரும் என்ற நம்பிக்கையுடன்! மீண்டும் வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புக்கள் வெளியீடு செய்ய!

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துகள் ரூபன்! தாங்கள் மேன் மேலும் பல நூல்கள் படைத்து சிறப்புற வாழ்த்துகள்! பாராட்டுகள்! விழா நிகழ்வுகள் அருமை!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்