வியாழன், 3 செப்டம்பர், 2015

காதல் என்னும் யாத்திரை..


கண்னை சிமிட்டும் மின்னல் போல.
உன் உருவம் என் கண்ணுக்குள்.
தினம் தினம் வெட்டி மறைகிறது.
உன் உதடுகள் ஏதோ வசிகரம் செய்ய.

என் இதய நாளஙகளில்உன் நினைவுகள்
என் நெஞ்சறை சுவாசத்தை திறக்கிறது.
நீ பேசாமல் மௌநித்த நிமிடங்கள் எல்லாம்.
என் கண்ணீர் கரை புரண்டு ஆறாக.ஓடியது.

 உன்னை என் மனச் சிறையில்.
காலமெல்லாம் விளக்கேற்ற.
கடவுள் தந்த பாக்கியமாய்.
காலமெல்லாம் சுமந்தேன் இதயத்தில்.

அன்புக்காய் அடிமையாகிய நாம்.
உன் நெஞ்சறையில் நானும்
என்நெஞ்சறையில் நீயும்.
அணையாத தீபமாய் சுடர் விட்டோம்.
காதல் என்னும் யாத்திரையில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எனது கவிதை நூல் வெளியீடு சம்மந்தமாக மலேசியா பத்திரிகையில்
2-9-2015 வந்த செய்தி...

 

19 கருத்துகள்:

  1. வசீகரம், மௌனித்த

    கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !
    சிறந்த சொல்லாட்சி காதல் என்னும் யாத்திரை மனதோடு ஒட்டிக் கொண்டது
    வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  3. கவிதையை ரசித்தோம். கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இனிமையான தருணங்கள் தொடரட்டும் சகோதரரே!
    வாழ்த்துக்கள்!
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. காதல் என்னும் யாத்திரையில் அன்புக்காய் அடிமையாகிய நாம்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள், இன்னும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பரே தங்களின் யாத்திரை நிச்சயம் வெல்லும்,
    தமிழ் மணம் இரண்டாவது

    பதிலளிநீக்கு
  8. காதல் பயணம் கை கூடும் ரூபன் விரைவில் வாழ்த்துக்கள் !!! நூல் வெளியீட்டு விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  9. காலமெல்லாம் காதல் வாழ்க
    காதலெனும் வேதம் வாழ்க !

    அருமை ரூபன் இனிய தருணங்கள் தொடரட்டும் வாழ்க வளமுடன்
    தம +1

    பதிலளிநீக்கு
  10. காத்தல் இல்லையேல்
    காதல் இல்லை போம்.

    அருமை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  11. யாத்திரை சுடர் கண்டு மகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
  12. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை தம்பி!!! உணர்வு பூர்வமான மௌனித்த நிமிடங்கள்....வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. காதல் வழிந்தோடும் கவிதை ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்