உயிரைப் பெற்றவன்-இன்று
சுதந்திரப்பறவையாக –இருக்க
அந்த உயிரை கொடுத்தவன்
கொடுத்தவள் இன்று-சிறைக் கைதியாக
மனச்சாட்சிகளின் கதவுகள் அடைக்கப்பட்டு
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்
ஒவ்வொரு விடியல் பொழுதும்
அவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை
தரணியிலே.மற்றவர்கள்- பிள்ளைகளுக்கு.
நிகராக வாழவேண்டும் என்ற
எண்ணச்சிறகு விரித்து பறந்தவர்கள்….
மகனே நீ இருக்க -உனக்கு
ஒரு கருவறை இருந்தது.
நான் உன்னுடன் வாழ –எனக்கென்று.
ஒரு கழிவரை கூட இல்லையா….?????
பெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக
மணிக்கு மணி மணித்துளியாக
கண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..
இந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்
ஆதவன் புலர்ந்திடுவான்
மண்வெட்டியை தோளில் –சுமந்து….
மாற்றான் தோட்டத்திற்கு- நீர்பாய்ச்சி
சமுதாயத்தில் நல்லவனாய் -வளர்த்தேனே
நீ செய்தது நாயமா.???நீதியா???
நான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,
அந்த கதிரவனும் மறைந்திடுவான்.
உங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி
உன்விழி உறங்க வைத்தேன்-மகனே
உன் சுக போக வாழ்வுக்கா
உன் சம்சாரத்தின் சொல்லுக்கா.
என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய் –
வேண்டாம் வேண்டாம் -உறவுகளே.
எம்மைப்பெற்ற தெய்வங்களை.
அரவனைக்க முதியோர் இல்லம்-வேண்டாம்.
அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை
பெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……
-அன்புடன்-
-ரூபன்-
இன்று இருவரது உள்ளத்திலும் ஒரே எண்ணம் பிரதி பலித்ததை நான்
பதிலளிநீக்குஇப்போது தான் கண்டேன் சகோதரா .எவ்வளவு பணம் இருந்தாலும்
சுய நலத்தை மதிக்கும் சில உறவுகளால் தனிமைப் படுத்தப்படும்
பெற்றோரை எண்ணி பேரப் பிள்ளைகள் வருத்தப் படும் அளவிற்கு
பெத்த பிள்ளைகள் வருத்தப் படுவதே இல்லை என்று நினைக்கும்
போது மனம் வலிக்கிறது :( .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் சகோதரா .
முதியோர் இல்லம் வேண்டாம் என்று நல்வழிப்படுத்தும் கவிதை அருமை.
பதிலளிநீக்குபிள்ளைகள் தான் வெளிநாட்டுக்கு போய்பெற்றவர்களின் பொறுமையைச் சோதிக்கிறார்கள் என்றால் ,மேலேயுள்ள படத்தில் உள்ள மேட்டரைப் படிப்பதற்குள் நானும் பொறுமை இழந்து விட்டேன் ,அதன் வேகத்தைக் கூட்டுங்க ரூபன் ஜி !
பதிலளிநீக்குத ம +1
அருமையான விடயம் எடுத்து வந்தீர்கள்
பதிலளிநீக்குபெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லுஎன்று எப்பவோ சொல்லி விட்டார்களே.
முதுமை சாபக் கேடாகி விட்டது.என்ன செய்வது.
உம்மை போல் பிள்ளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அருமை அருமை மேலும் சிறக்க ! தொடர வாழ்த்துக்கள் ....!
ஆமாம் விடயத்தை மேலே படிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.
கொஞ்ச நேரம் நிறுத்தி வாசிக்க விடுப்பா.
கவிதை அருமை.
பதிலளிநீக்குஉன் சுக போக வாழ்வுக்கா
பதிலளிநீக்குஉன் சம்சாரத்தின் சொல்லுக்கா.
என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய் –
வேண்டாம் வேண்டாம் -உறவுகளே.
எம்மைப்பெற்ற தெய்வங்களை.
அரவனைக்க முதியோர் இல்லம்-வேண்டாம்.
அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை
பெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……
மிக யதார்த்தமான இந்த உலகை நோக்கி எழும் சுட்டெரிக்கும் வார்த்தைகள்! பலரது மனதை சுட்டிக்காட்டிய வரிகள்1 மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்!
மனசாட்சிக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்!
அற்புதமான வரிகள் ரூபன் தம்பி!
துளசிதரன், கீதா
த.ம.
வெளி நாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு துடி துடிக்கும் பெற்றோரின் அவலக் குரல் அவர்கள் காதில் ஒலித்தால் நலமே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு"என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய்" என
தந்தையர் அழுவதை விட
ஈழத்து முதியோர் இல்லங்கள்
இசைக்கும் தேசிய கீதமாயிற்றே!
கருத்தும் சொல்லிச் சென்றவிதமும்
பதிலளிநீக்குமிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகாளையாய் வாழ்ந்தாலும் காலத்தின் நீட்சியிலே
நாளையே நாமும் நலிந்துடல் போய்விடுவோம்
கோழையாய் வாழ்ந்தாலும் கொல்லாமல் காத்திடுவோம்
வாழையடி வம்சம் வளர்த்து !
அருமையாய் இருக்கிறது
ஆதங்கம் புரிகிறது
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
அர்த்தம் பொதிந்த கவிதை. பாராட்டுகள் ரூபன்.
பதிலளிநீக்குபிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்க சொல்லும் கவிதை அருமை.
பதிலளிநீக்குகூட்டுக் குடும்ப வாழ்க்கை சிந்திந்து போனதால் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. பிற்காலத்தில் நாமும் அதில் இடம்பிடிக்க வேண்டி இருக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்
பதிலளிநீக்குவேதனை பதிவு..
பதிலளிநீக்குவேகமான வாழ்க்கை
பெற்றவர்களை
தேவையற்ற சுமையாக கருத வைத்துவிட்டது...
வேதனை..
http://www.malartharu.org/2013/02/blog-post_7031.html