உயிரைப் பெற்றவன்-இன்று
சுதந்திரப்பறவையாக –இருக்க
அந்த உயிரை கொடுத்தவன்
கொடுத்தவள் இன்று-சிறைக் கைதியாக
மனச்சாட்சிகளின் கதவுகள் அடைக்கப்பட்டு
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்
ஒவ்வொரு விடியல் பொழுதும்
அவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை
தரணியிலே.மற்றவர்கள்- பிள்ளைகளுக்கு.
நிகராக வாழவேண்டும் என்ற
எண்ணச்சிறகு விரித்து பறந்தவர்கள்….
மகனே நீ இருக்க -உனக்கு
ஒரு கருவறை இருந்தது.
நான் உன்னுடன் வாழ –எனக்கென்று.
ஒரு கழிவரை கூட இல்லையா….?????
பெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக
மணிக்கு மணி மணித்துளியாக
கண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..
இந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்
ஆதவன் புலர்ந்திடுவான்
மண்வெட்டியை தோளில் –சுமந்து….
மாற்றான் தோட்டத்திற்கு- நீர்பாய்ச்சி
சமுதாயத்தில் நல்லவனாய் -வளர்த்தேனே
நீ செய்தது நாயமா.???நீதியா???
நான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,
அந்த கதிரவனும் மறைந்திடுவான்.
உங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி
உன்விழி உறங்க வைத்தேன்-மகனே
உன் சுக போக வாழ்வுக்கா
உன் சம்சாரத்தின் சொல்லுக்கா.
என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய் –
வேண்டாம் வேண்டாம் -உறவுகளே.
எம்மைப்பெற்ற தெய்வங்களை.
அரவனைக்க முதியோர் இல்லம்-வேண்டாம்.
அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை
பெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……
-அன்புடன்-
-ரூபன்-