சனி, 13 ஜூன், 2020

மனங்களில் நிறைந்தவனே.

எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு
நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே
சொந்த தமிழில் செந்தமிழ் பாடி
அகிலம் வாழும் தமிழர் மனங்களில்
நிறைந்த முழுமுதல் கவிஞரே.-நீ வாழ்க.

சில மணி நேரம் உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வின் இளவேனிக்காலங்கள்
இயல் இசை நாடகம் என்ற முக்கலையும்
வளர்க்கும் சங்கத் தமிழின் அவைச் சான்றோரே
உன் பேச்சு அகிலமெல்லாம்  இனிக்குதையா

அகவை நிறைவை ஆயிரம் உறவுகள் கூட்டி
அவனியில் வலம் வரும் உனக்கு
ஆயுள் முழுதும் அண்டவன் அருள் புரிவான்.
தமிழுக்காய் நீ வாழுகிறாய்
உன் புகழ் தரணி எங்கும் பூபாளம் பாடுதையா

ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
ஏழைகளின் தோழனாய் மாந்தர்களின்
மனங்களில் நிறைந்தவனே.  
வாசு தேவன் நாமம் பெற்ற உன்னை.
அகவை நிறைவில் ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துக்கவிதையில் நனைய
இந்தச் சான்றோனும் வாழ்த்துகிறேன்.


நன்றி
அன்புடன்
த.ரூபன்

10 கருத்துகள்:

  1. வாழ்த்துப்பா அருமையிலும் அருமை.வாசுதேவனௌ ஐயா அவர்களுக்கு பதிவர்கள் சார்பில் எங்கள் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  2. வாசுதேவன் ஐயாவுக்கு எமது வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
  3. ஐயாவுக்கு வாழ்த்துகள்...

    தம்பி நலம் தானே... தொடர்பு (பேசி) கொண்டு ரொம்ப நாளாகி விட்டது...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துப்பா.... நன்றாக இருக்கிறது ரூபன்.

    உங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. வாசுதேவன் ஐயா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும். கவிதை அருமை தம்பி ரூபன். நலமா? மீண்டும் வலை உலகில் வந்தது தெரிந்தது. மகிழ்ச்சி

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆயுள் முழுதும் அண்டவன் அருள் புரிவான்.//

    ஆண்டவன் என்று வர வேண்டுமோ?

    இது வெளியிட அல்ல ரூபன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கவிதை அருமை..
    திருமிகு.வாசுதேவ ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
    இளவேனிக்காலங்கள் - இளவேனிற்காலங்கள்?!!
    கோ.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்