ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-